Published : 24 Mar 2020 11:40 PM
Last Updated : 24 Mar 2020 11:40 PM
21 நாட்கள் ஊரடங்கு யாருகெல்லாம் பொருந்தும், எதற்கெல்லாம் தடை என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது இன்று நள்ளிரவு முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாகவும், மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
1) மத்திய அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட அனைத்தும் மூடி இருக்கும்.
விதிவிலக்கு
ராணுவம், ஆயுதப்படை, காவல்துறை, கருவூலம், பெட்ரோலியம் உள்ளிட்ட பொது பயன்பாடு, பேரிடர் நிர்வாகம், மின்சார உற்பத்தி, மின்பகிர்வு, தபால் நிலையம், தகவல் மையங்கள், வானிலை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை மையங்கள்
2) மாநில அரசு/ யூனியன் பிரதேச அரசு அலுவலகங்கள், சுயாட்சி அமைப்புகள், போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பிற அரசு நிர்வாக கார்பரேஷன்கள்.
விதிவிலக்கு
அ) காவல்துறை, ஊர்காவல்படை, உள்நாட்டு பாதுகாப்பு, தீயணைப்பு, அவசரகால சேவைகள், பேரிடர் நிர்வாகம், சிறை,
ஆ) மாவட்ட நிர்வாகம், கரூவூலம்
இ) நகராட்சி அமைப்புகள், சுகாதாரம், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட துறை சார்ந்த ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்.
மேலே விதிவிலக்கு வழங்கப்பட்ட துறைகள் குறிப்பிட்ட அளவு ஊழியர்களுடன் இயங்க வேண்டும். மற்ற துறையினர் வீட்டில் இருந்து பணியாற்றலாம்.
3) மருத்துவமனைகள், மருத்துவ நிர்வாகம், அது சார்ந்த உற்பத்தி, விநியோகம், அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த மருத்துவமனைகள், மருந்துகடை, மருத்துவ உபகரணங்கள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை செயல்படும். மருத்துவமனை சாரந்த பிற ஆதரவு சேவைகளும் அனுமதிக்கப்படும்.
4) வர்த்தக மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்படும்
விதிவிலக்கு
அ) ரேஷன் கடை, உணவு, மளிகை, பழங்கள், காய்கறிகள், பால், இறைச்சி, மீன், மாட்டுத் தீவனம் போன்றவற்றுக்கு அனுமதி. எனினும் இதனை குறைந்தபட்ச ஊழியர்களுடன் மக்கள் வீடுகளுக்குகொண்டு சேர்க்க வேண்டும்.
ஆ) வங்கிகள், இன்சூரன்ஸ் அலுவலகங்கள், ஏடிஎம்கள்
இ) பத்திரிகை மற்றும் ஊடகங்கள்
ஈ) தொலைத்தொடர்பு, இண்டர்நெட் சேவை, கேபிள், ஐடி மற்றும் ஐடி சார்ந்த தேவை. இதில் தேவையான ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும்.
உ) தேவையான உணவு, மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் ஆன்லைன் மூலம் வழங்கலாம்.
ஊ) பெட்ரோல், எல்பிஜி, சமையல் எரிவாயு சேமிப்பு நிலையங்கள்
எ) மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம்
ஏ) மூலதன சந்தை பங்குச்சந்தை சார்ந்த நிறுவன அமைப்புகள்
ஐ) குளிர்சாதன கிடங்குகள், சேமிப்பு கிடங்குகள்
ஒ) தனியார் பாதுகாப்பு அமைப்புகள்
இதைத்தவிர மற்ற அனைத்து தரப்பினரும் வீடுகளில் இருந்து மட்டுமே பணியாற்ற வேண்டும்.
5) தொழிற்சாலை நிறுவனங்கள் மூடப்பட வேண்டும்.
விதிவிலக்கு:
அ) அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள்
ஆ) மாநில அரசுகள் அறிவுறுத்தும் மற்ற உற்பத்தி நிறுவனங்கள்
6) ரயில், பேருந்து விமான போக்குவரத்து முழுமையாக முடக்கப்படும்
விதிவிலக்கு
அ) அத்தியாவசிப் பொருட்கள் கொண்டு செல்லலாம்.
இ) சட்டம் மற்றும் அத்தியாவசிய சேவை வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள்
7) விருந்தோம்பல் துறை முழுமையாக முடக்கம்
விதிவிலக்கு
அ) ஊரடங்கு காரணமாக வெளியே தங்க வேண்டியவர்கள், மருத்துவ அவசர ஊழியர்கள் போன்றவர்கள் தங்குவதற்கான ஓட்டல்கள், தங்குமிடம்
ஆ) கரோனா நோயாளிகளை தனிமைப் படுத்துவதற்கான இடங்கள்
8) அனைத்து கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள் மூடப்படும்
9) அனைத்து வழிபாடடு தலங்களும் மூடப்படும். எந் ஒரு மத வழிபாட்டு கூட்டத்திற்கு விதி விலக்கு கிடையாது.
10) சமூக, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, மத கூட்டங்கள் எதற்கும் அனுமதி இல்லை.
11) இறுச்சடங்கு என்றால் வெறும் 20 பேருக்கு மட்டுமே அனுமதி
15.02.2020-ம் தேதிக்கு பிறகு வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இதனை உள்ளூர் சுகாதார அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
13) கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான வேறு ஏதும் விதிவிலக்கு தேவைப்பட்டால் வழங்கப்படும்.
14) மாவட்ட ஆட்சியர்களும், அந்தந்த பகுதிகளில் உள்ள அதிகாரிகளும் தங்கள் பகுதியில் இந்த நடவடிக்கையை உறுதியாக மேற்கொள்ள வேண்டும்.
15) அனைத்து அமலாக்கும் அதிகாரிகளும் இந்த விதிமுறைகளை சரியான முறையில் அமல்படுத்துவதுடன், மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேசமயம் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
16) பணிகளுக்கு தேவையான ஊழியர்கள், ஏற்பாடுகள், பொருட்கள், மருத்துவமனை உள்ளிட்ட வசதிகள் போன்றவற்றை செய்ய வேண்டும்.
17) இந்த விதிமுறைகளை மீறினால் 2005-ம் ஆண்டு பேரிடர் நிர்வாகச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கூறிய அனைத்தும் 25.03.2020 அதிகாலை முதலே அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT