Published : 24 Mar 2020 08:41 PM
Last Updated : 24 Mar 2020 08:41 PM

நமது ஒற்றுமையையும், உறுதியையும் காட்ட வேண்டிய தருணம் இது: பேரழிவை தடுத்து நிறுத்துவோம்: பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி

நமது ஒற்றுமையையும், உறுதியையும் காட்ட வேண்டிய தருணம் இது, பேரழிவை தடுத்து நிறுத்துவோம் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாக தெரிவித்து இருந்தார். அதன்படி அவர் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள்:

* நாடுமுழுவதும் இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

* இதன் மூலம் முழு அளவில் கரோனாவுக்கு எதிராக நாம் போராட முடியும். அடுத்த 21 நாட்களுக்கு இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். ஒவ்வொரு இந்தியரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

*இந்த 21 நாட்களை மக்கள் ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

* நமது ஒற்றுமையையும், உறுதியையும் காட்ட வேண்டிய தருணம் இது.

* தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள், நீ்ங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள்

* இந்தியாவிலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.

* மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து ஊரடங்கை பின்பற்றுவதன் மூலம் மட்டுமே பேரழிவை தடுத்து நிறுத்த முடியும்.

மக்கள் ஊரடங்கின் மூலம் இந்திய மக்கள் கரோனா வைரஸை் எதிர்த்து போராடுகிறார்கள் என்பதை உலகம் அறிந்து கொண்டது.

* எந்த தடை வந்தாலும் மனித குலத்திற்காக ஒருங்கிணைந்து செயல்பட்டோம்.மக்கள் ஒவ்வொருவரும் சூழலை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

* ஒருவர் மூலமாக மற்றொருவருக்கு எளதில் வைரஸ் பரவும். இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

* மக்கள்உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை ஒருபோதும் சகிக்க முடியாது. மக்கள் தங்கள் சூழலை உணர்ந்து ஒத்துழைக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x