Last Updated : 24 Mar, 2020 08:54 AM

1  

Published : 24 Mar 2020 08:54 AM
Last Updated : 24 Mar 2020 08:54 AM

கரோனா வைரஸ் கட்டுப்பாடு: ஷாஹின்பாக் போராட்டக்காரர்களை வெளியேற்றிய  டெல்லி போலீஸ்

சிஏஏ என்ற குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து சுமார் 100 நாட்களுக்கும் மேலாக டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் இஸ்லாமியர்கள் நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது, கரோனா தொற்று அபாயம் காரணமாக டெல்லி போலீஸ் காலை 7 மணியளில் போராட்டக்காரர்களை வெளியேற்றினர்.

தென் கிழக்கு டெல்லியின் போலீஸ் உதவி ஆணையர், ஆர்.பி.மீனா கூறும்போது, கோவிட்-19 நோய்ப்பரவலைத் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணியளவில் போலீச் மற்றும் துணை ராணுவப்படையினர் ஷாஹின்பாக் பகுதிக்கு சென்றனர், அங்கு 50 பேர் போராட்டக்களத்தில் இருந்தனர்.

“அவர்களிடம் 144 தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது, எனவே போராட்டம் நடத்த முடியாது என்று அவர்களிடம் தெரிவித்தோம், மேலும் அவர்கள் அமர்ந்து போராடும் சாலை நொய்டாவையும் டெல்லியையும் இணைப்பது , அவசர மருத்துவப் பயணம் தேவைப்பட்டால் இந்த சாலை முக்கியமானது, எனவே போராட்ட இடத்தை விட்டு நகருங்கள் என்று கூறினோம், ஆனால் அவர்கள் செல்ல மறுத்தனர்.

இதனையடுத்து சட்டவிரோதமாக கூடியதாக போலீஸார் பெண் உட்பட 6 பேரைக் கைது செய்தனர். ஆர்ப்பாட்ட இடத்தில் இருந்த அமைப்புகளும் அகற்றப்பட்டன” என்றார்.

நாடு முழுதும் பல மாநிலங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது, மக்கள் ஒத்துழைக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x