Last Updated : 23 Mar, 2020 05:33 PM

 

Published : 23 Mar 2020 05:33 PM
Last Updated : 23 Mar 2020 05:33 PM

கரோனா: லாக்-டவுனை கடுமையாக அமல்படுத்துங்கள்; மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை; மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

நாட்டில் 80 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும் லாக்-டவுனை கடுமையாக அமல்படுத்த வேண்டும், அதை மீறுவோர் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிகாரபூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையி்ல மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும் கரோனா வைரஸின் தாக்கத்துக்கு இதுவரை இந்தியாவில் 435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 80 மாவட்டங்களில் லாக்-டவுனை அதாவது முடக்கிவைக்க மாநில அரசுகளுடன் சேர்ந்து மத்திய அரசு ஆலோசித்து முடிவு செய்தது.

இதன்படி மக்கள் அடர்த்தி, போக்குவரத்து அதிகம் வாய்ப்புள்ள 80 மாவட்டங்கள் மார்ச் 31-ம் தேதிவரை முடக்கப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் ஈரோடு, சென்னை, காஞ்சிபுரம் ஆகியவை அடங்கும்.

ஆனால், பிரதமர் மோடி தனது ட்வி்ட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்தில், “கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளில் ஒன்றான லாக்-டவுனை(கடும் கட்டுப்பாடுகள்) பெரும்பாலான மக்கள் தீவிரமாகக் கருதவில்லை.

மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகளை தீவிரமாகப் பின்பற்றி தயவு செய்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருங்கள். லாக்-டவுன் நடக்கும் அனைத்து மாநிலங்களிலும் சட்டம் ஒழுங்ைக கடுமையாகப் பின்பற்றி நடைமுறைப்படுத்தி மக்களை கட்டுக்குள் வைக்க மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்

இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு பிறப்பித்த உத்தரவில், 80 மாவட்டங்களில் பின்பற்றப்படும் லாக்-டவுனை தீவிரமாக மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும்.

சட்டம் ஒழுங்கை கடுமையாக அமல்படுத்தி, அதை மீறி நடமாடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ேமலும், இந்த மாவட்டங்களில் அத்தியாவசியமற்ற அனைத்துப் போக்குவரத்துகளையும் ரத்து செய்து தீவிரமாக முடக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x