Published : 22 Mar 2020 04:25 PM
Last Updated : 22 Mar 2020 04:25 PM
நாடுமுழுவதும் துணை ராணுப்படையினர் ஏப்ரல் 5-ம் தேதி வரை எங்கும் பயணம் மேற்கொள்ள அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது, தற்போது அவர்கள் எங்கு தங்கி இருக்கிறார்களோ அங்கேயே தங்கியிருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
துணை ராணுவப்படையினரில் யாருக்கேனும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும் அதை ரத்து செய்து பயணத்தை தவிர்க்குமாறு உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் , தடுப்பு நடவடிக்களையும் எடுத்து வருகின்றனர்.
கரோனா வைரஸுக்கு இதுவரை இந்தியாவில் 7 பேர் உயிரிழந்துள்ளனர், 350-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உள்நாட்டு பாதுகாப்பில் மிக முக்கியமாக இருக்கும், மத்திய ரிசர்வ் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தொழிற் பிரிவு பாதுகாப்பு படை, இ்ந்தோ-திபெத் எல்லைப்படை, சாஸ்தரா சீமா பால், தேசிய பாதுகாப்பு படை ஆகியோரின் பணிகள் முக்கியமானது. இந்தப் படைப்பிரிவுதான் நாட்டின் பாதுகாப்பின் முதுகெலும்பாக பார்க்கப்படுகிறது
இந்நிலையில் கரோனா வைரஸின் பரவல் தீவிரமாக இருப்பதையடுத்து துணை ராணுவப்படைப்பிரிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி துணை ராணுவப்படையினர் யாரும் வழக்கமான பணிகள், ஒத்திகைகள் என எங்கும் பயணி்க்க வேண்டாம். தற்போது எந்த இடத்தில் முகாமிட்டுள்ளார்களோ அங்கேயே தங்கியிருக்க வேண்டும். விடுமுறையில் சென்ற ஊழியர்கள் ஏப்ரல் 5-ம்தேதிவரைத் வரத் தேவையில்லை, யாருக்கேனும் விடுமுறைஅளித்திருந்தாலும் அதை ரத்து செய்துவிடலாம். ஏப்ரல் 5-ம் தேதிக்குப்பின் சூழல் கருதி வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல எல்லைப்பாதுகாப்பு படையினரும் எந்தவிதமான பயணம் மேற்கொள்ளவோ, விடுமுறையில் செல்லவோ, தற்காலிகமாக வெளியூர் செல்லவோ தடை விதிக்கப்படுகிறது. துணை ராணுவப்படையினர் தேவையின்றி எங்கும் செல்வதைத் தவிர்க்கும் பொருட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
மிகவும் அவசரமன சூழலில் மட்டும் பயணிக்க துணை ராணுவப்படையினருக்கும், எல்லைப்பாதுகாப்பு படையினருக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அந்த பயணமும் உயர் அதிகாரியின் தீவிரமான கலந்தாய்வுக்குப்பின்புதான் அனுமதியளிக்கப்படும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT