Published : 21 Mar 2020 08:40 AM
Last Updated : 21 Mar 2020 08:40 AM
தெலங்கானா மாநிலம் வாரங்கலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க, திருமண விழாஒன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அதிலும் மாப்பிள்ளை பிரான்சில் இருந்து திரும்பியவர்.
கரோனா வைரஸ் தொற்று அவருக்கு இருக்கக்கூடும் என்றசந்தேகத்தில் 2 வார காலம் மருத்துவக் கண்காணிப்புக்கு அனுப்பப்பட்டவர். அதை மீறி 7 நாட்கள் திருமண கொண்டாட்டத்தில் அவர்கலந்து கொண்டது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த திருமணவரவேற்பு நிகழ்த்தி ரத்து செய்யப்பட்டு கல்யாண மாப்பிள்ளை தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ கண்காணிப்பில் தற்போது வைக்கப்பட்டு இருக்கிறார்.
கடந்த மார்ச் 12-ம் தேதிபிரான்சில் இருந்து ஹைதராபாத்துக்கு கல்யாண மாப்பிள்ளையும் அவரது நண்பரும் வந்துள்ளனர். விமான நிலையத்தில் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இருவரும் தங்களுடைய வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். அதை மீறி இருவரும் வாரங்கலுக்கு சென்றிருக்கிறார்கள். இதையடுத்து, ஆயிரம் பேர் சூழ திருமண விழா நடை பெற்றிருக்கிறது.
இந்த திருமண நிகழ்ச்சியில் ஒருவர்கூட முகக் கவசம் அணியவில்லை. இதனால் திருமண விழாவில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT