Published : 19 Mar 2020 04:35 PM
Last Updated : 19 Mar 2020 04:35 PM

யெஸ் வங்கி வழக்கு: அமலாக்கத் துறை முன் அனில் அம்பானி ஆஜர்

யெஸ் வங்கி விவகாரம் தொடர்பாக மார்ச் 19ம் தேதியான இன்று ரிலையன்ஸ் குழும சேர்மன் அனில் அம்பானி மும்பையில் உள்ள அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன்னால் விசாரணைக்கு ஆஜரானார்.

பலார்ட் எஸ்டேட்டில் உள்ள ஈடி அலுவலகத்துக்கு அனில் அம்பானி காலை 9 மணியளவில் வந்து ஆஜரானார். கைது செய்யப்பட்ட யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் நிர்வாகத் தலைமையில் இருந்த காலத்தில் யெஸ் வங்கியிடமிருந்து கடன் பெற்ற அனைத்து தொழிலதிபர்களையும் நேரில் ஆஜராகுமாறும் அமலாக்கத்துறை சம்மன்கள் அனுப்பியுள்ளது.

அனில் அம்பானி நிறுவனம் அதிக அளவில் கடன் பெற்றவர்கள் பட்டியலில் இருப்பதாக வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யெஸ் வங்கியின் வாராக்கடன் அளவு ரூ. 12,500 கோடியாக உள்ளது.

திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கபில் வதவான், தீரஜ் வதவான் ஆகியோர் கரோனாவைக் காரணம் காட்டி ஆஜராக முடியவில்லை என்று அமலாக்கத்துறைக்கு தெரிவித்தனர்.

இந்தியா புல்ஸ் நிறுவனத்தின் சமீர் கெலாட் என்பவர் தான் லண்டனில் இருப்பதாகவும் கரோனா பயண கட்டுப்பாடுகள் முடியும் வரை தன்னால் விசாரணையில் கலந்து கொள்ள இயலாது என்ரும் ஈடியிடம் தெரிவித்து விட்டார்.

எஸ்ஸெல் குழுமத்தின் சுபாஷ் சந்திரா ராஜ்ய சபா உறுப்பினரும் ஆனதால் அவை நடக்கும் காலம் என்பதால் தன்னால் ஆஜராக முடியாது என்று தெரிவித்துள்ள நிலையில் அனில் அம்பானி ஆஜரானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x