Published : 19 Mar 2020 08:51 AM
Last Updated : 19 Mar 2020 08:51 AM

மலேசியாவிலிருந்து ஆந்திரா திரும்பிய 150 மாணவர்கள்

விசாகப்பட்டினம்

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியால் மலேசியாவில் தவித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த 150 மாணவர்கள் நேற்று தாயகம் திரும்பினர்.

கரோனா வைரஸ் பீதியால், பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியா வரும் விமான சேவைகளை மத்திய அரசு ரத்து செய்தது. இதன் காரணமாக மலேசியா தலைநகரம் கோலாலம்பூரில் 150 ஆந்திர பொறியியல் மாணவர்களும், பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரம் மணிலாவில் 60 ஆந்திர பொறியியல் மாணவர்களும் தாயகம்திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

இவர்கள் ஆந்திராவில் உள்ளவிசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, குண்டூர், அனந்தபூர், காகுளம், நெல்லூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களாவர்.

மேலும், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் மற்றும் வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர். இவர்கள்அனைவரும் கடந்த செவ்வாய்க்கிழமை மதியமே தாயகம் திரும்பஅந்தந்த விமான நிலையங்களை சென்றடைந்தனர். ஆனால், இவர்கள் யாரையும் இந்தியா செல்ல அந்நாட்டு விமான நிலைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஆதலால், நள்ளிரவு வரை இவர்கள் அனைவரும் கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது.

அதன்பின்னர், ஆந்திர அரசு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இதனை தொடர்ந்து நள்ளிரவு ஏர் ஏசியா விமானம் மூலம் அனைவரும் விசாகப்பட்டினம் புறப்பட்டனர். நேற்று காலை இந்த விமானம் விசாகப்பட்டினம் வந்தடைந்தது. அதன் பின்னர் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்காக விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு அனைவருக்கும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களின் ரத்தம் தற்போது புனே நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை வந்த பிறகே இவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுவர் எனவும் மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x