Published : 17 Mar 2020 06:36 AM
Last Updated : 17 Mar 2020 06:36 AM
கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 6 பேர் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. ஒடிசாவில் முதல்முறையாக 33 வயது இளைஞர் ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்றியிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இவர் அண்மையில் இத்தாலி சென்றுவிட்டு நாடு திரும்பியுள்ளார்.
கேரளாவில் மலப்புரம், காசர்கோட்டை சேர்ந்த 2 பேருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்றியிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா 38, கேரளா 24, ஹரியாணா 14, உத்தர பிரதேசம் 13, டெல்லி 1, கர்நாடகா 6, ராஜஸ்தான் 4, லடாக் 3, தெலங் கானா 4, காஷ்மீர் 2, பஞ்சாப், ஆந்திரா, தமிழகம், உத்தரா கண்ட், ஒடிசாவில் தலா ஒருவர் என நாடு முழுவதும் 120 பேர் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள் ளனர். கர்நாடகா, டெல்லியில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று கூறிய தாவது:
ஆன்மிக விழாக்கள், சமூக விழாக்கள், கலாச்சார விழாக்களில் 50 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. திருமண விழாக்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. எனினும் இப்போதைக்கு திருமண விழாக்களை தள்ளிவைக்குமாறு அறிவுறுத்துகிறோம். டெல்லி ஷாஹின் பாக் போராட்டத்துக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்று நிருபர்களிடம் கூறியபோது, "கோவிட்-19 வைரஸ் காய்ச்சலை சமாளிக்க ரூ.200 கோடி நிதியம் ஏற்படுத்தப்படுகிறது. இந்த காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதார ஊழியர்களுக்கு ரூ.10 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீடு வசதி செய்து தரப்படும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT