Last Updated : 16 Mar, 2020 11:16 AM

 

Published : 16 Mar 2020 11:16 AM
Last Updated : 16 Mar 2020 11:16 AM

ஈரானிலிருந்து 53 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

ஈரானிலிருந்து இன்று அதிகாலை வந்த 53 இந்தியர்கள் தனிமைப்படுத்தப்படுவதற்காக கண்டெய்னரில் அழைத்துச் செல்லப்படும் காட்சி | படம்: ட்விட்டர்

புதுடெல்லி

53 இந்தியர்கள் திங்களன்று காலை ஈரானில் இருந்து தாயகம் திரும்பினர், கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான ஈரானிலிருந்து இதுவரை வந்த இந்தியர்கள் எண்ணிக்கை 389 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் உருவாகி உலகையே அச்சுறுத்தத் தொடங்கியுள்ள கரோனா வைரஸ் ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. ஈரானில் 700 க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் இறந்துள்ளனர், கிட்டத்தட்ட 14,000 பேருக்கு இந்நோய் கண்டறியப்பட்டுள்ளன.

ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டெடுக்க மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் பலனாக படிப்படியாக இந்தியர்கள் ஈரானிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அவர்கள் இந்தியாவுக்கு பத்திரமாக அழைத்து வரப்படுகின்றனர்.

இந்த நாடுகள் "தீவிர சூழ்நிலையை" எதிர்கொண்டுள்ளதால் ஈரான் மற்றும் இத்தாலியில் சிக்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக ஜெய்சங்கர் கடந்த வாரம் மாநிலங்களவையில் தெரிவித்திருந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை 58 இந்திய யாத்ரீகர்களின் முதல் தொகுதி ஈரானில் இருந்து திரும்பக் கொண்டுவரப்பட்டது, 44 இந்திய யாத்ரீகர்களின் இரண்டாவது குழு வெள்ளிக்கிழமை அங்கிருந்து வந்தது.

நேற்று 230 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஈரானில் இருந்து புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டு, ஜெய்சால்மரில் உள்ள இந்திய ராணுவ நல மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து 53 பேர் இன்று காலை டெல்லி வந்தடைந்தனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய மஹான் ஏர் விமானத்தில் இந்தியர்கள் வந்தனர், பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதற்காக ஏர் இந்தியா விமானத்தில் ஜெய்சால்மேருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x