Published : 13 Mar 2020 08:19 PM
Last Updated : 13 Mar 2020 08:19 PM
இந்தியாவில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகமாக இருக்கும் மாநிலம் உத்தரப் பிரதேசம் என்று கூறப்படுவதுண்டு, அதற்காகத்தான் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் போலீஸாருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி நடவடிக்கைகளை ஊக்குவித்து வருகிறார்.
இந்நிலையில் கலவரங்களுக்குப் பெயர் போன முசாபர்நகரில் சட்ட விரோதமாக ஆயுதங்களைத் தயாரிக்கும் ஆலை ஒன்றை போலீஸார் ரெய்டு நடத்தி ஏகப்பட்ட பயங்கர ஆயுதங்களைக் கைப்பற்றினர். இது தொடர்பாக ராஜ்பீர் என்பவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப் பதியப் பட்டுள்ளது.
முசாபர் நகர் கட்டவ்டி டவுனில் மீராப்பூர் சாலையில் இந்த ஆயுதத் தொழிற்சாலை இயங்கி வந்துள்ளது.
ஐந்து ரைபிள்கள், 2 துப்பாக்கிகள், 7 நாட்டுத் துப்பாக்கிகள், மற்றும் பெரிய அளவில் கலவரங்களில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், தயாரிப்பில் இருந்து வரும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
முசாபர் நகரிலிருந்து இது தொடர்பான துப்பு கிடைத்தவுடன் போலீஸார் விரைந்து நடவடிக்கையில் ஈடுபட்டு ராஜ்பீர் என்பவரைக் கைது செய்து வழக்குப் பதிந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT