

ஈரானில் தவிக்கும் இந்தியர்களில் 44 பேர் 2-ம் கட்டமாக இன்று மீட்கப்பட்னர். அவர்கள் அனைவரும் யாத்ரீகர்கள் ஆவர்.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸால் அந்நாட்டில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். சீனா மட்டுமல்லாமல் தென் கொரியா, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி, இந்தியா உள்ளிட்ட 119 நாடுகளிலும் கோவிட்-19 வைரஸ் பரவியுள்ளது. ஈரானில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அங்கு பல்வேறு காரணங்களுக்காக சென்ற இந்திர்களும் சிக்கிக் கொண்டனர்.
ஈரானின் பல்வேறு மாகாணங்களில் சுமார் 6,000 இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் 1,000 பேர் ஜம்மு-காஷ்மீரில் இருந்து சென்ற யாத்ரீகர்கள். இது தவிர லடாக், கேரளா, தமிழ்நாடு மற்றும் குஜராத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 1,000 பேர் மற்றும் 300 மாணவர்கள் ஆகியோர் அந்நாட்டில் சிக்கியுள்ளனர்.
ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்டு வரும் முயற்சியில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு குழுவாக அவர்கள் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.
ஈரானில் தவிக்கும் இந்தியர்களில் 44 பேர் 2-ம் கட்டமாக இன்று மீட்கப்பட்னர். அவர்கள் அனைவரும் யாத்ரீகர்கள் ஆவர்.