Last Updated : 12 Mar, 2020 05:42 PM

1  

Published : 12 Mar 2020 05:42 PM
Last Updated : 12 Mar 2020 05:42 PM

தர்மபுரி தொகுதியின் குடிநீர் பிரச்னையை தீர்க்க 3 நீர் திட்டங்கள்: மக்களவையில் செந்தில்குமார் வலியுறுத்தல்

செந்தில் குமார் - கோப்புப் படம்

புதுடெல்லி

தர்மபுரி தொகுதியில் குடிநீர் பிரச்சினை தீர்ப்பதற்கு 3 நீர் திட்டங்களை நிறைவேற்றிட இன்று மக்களவையில் வலியுறுத்ததப்பட்டது. இதற்காக தமிழக அரசிற்கு போதிய அழுத்தம் தர வலியுறுத்தி, திமுக எம்.பியான செந்தில்குமார் மத்திய அரசிடம் கோரினார்.

இது குறித்து அவர் மக்களவையில் பேசியதாவது:

எனது தொகுதியானது, குடிநீர் பற்றாக்குறையால்,பெரிதும் தவிக்கிறது. பல இடங்களில், நிலத்தடி நீர், அதளபாதாளத்திற்கு,சென்றுவிட்டது. நீர்ப்பாசன தேவைகள் என்று மட்டுமில்லாது, வேளாண்
தொழிலுக்கு மிகவும் உதவியாக இருக்கும் கால்நடைகள்கூட, போதிய தண்ணீர்இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு தீர்வாக, 3 திட்டங்கள் உள்ளன. தர்மபுரி தொகுதிக்கு உட்பட்டஒகேனக்கல் பகுதியில், காவிரி ஆற்றில் ஓடும் கூடுதல் தண்ணீரை, அங்குஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள குழாய்களை பயன்படுத்தி, புதிய கால்வாய்கள்வாயிலாக கொண்டு சென்று, அப்பகுதிகளில் உள்ள ஏரிகளை, நிரப்ப முடியும்.

இதைச் செய்தால், அப்பகுதி முழுவதும், நிலத்தடி நீர்மட்டும் உயர்வதோடுமட்டுமல்லாது, அதன்மூலம், எண்ணற்ற கிராம மக்களின், குடிநீர் உள்ளிட்டஅத்தியாவசிய தேவைகளை, முற்றிலுமாக பூர்த்தி செய்திட முடியும்.

இரண்டவதாக, தென்பெண்ணையாறு தண்ணீரைக் கொண்டு, தூள்செட்டி ஏரியைநிரப்புவது. இதற்காக, கடந்த 2015 ல் 68 ஏக்கர் பரப்பளவு பகுதிகள்கையகப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் துவங்கின. ஆனால், அவை வெறும்காகிதத்தில் மட்டுமே, இன்னமும் உள்ளன.

5 ஆண்டுள் ஆகியும் அப்படியே கிடப்பில் கிடக்கும், இத்திட்டத்தைநிறைவேற்றினால், பாலக்கோடு, காரியமங்கலம் மற்றும் தர்மபுரி ஆகியபகுதிகளுக்கு உட்பட்ட, ஏறத்தாழ 1,500 ஹெக்டேர்பரப்பளவுக்கு, அவசியமானதண்ணீர் தேவையை நிறைவேற்றித் தந்திட முடியும்.

மூன்றவதாக, எண்ணெய்கல்புதூர் நீர் திட்டம். 380 ஹெக்டேர்பரப்பிலானஇத்திட்டம் மூலம், கிருஷ்ணகிரியிலிருந்து காரியமங்கலத்திற்கு, தண்ணீர்கொண்டு வரும் நோக்கில் தீட்டப்பட்டது. ஆனால், இதுவும்நிறைவேற்றப்படவில்லை. இதை நிறைவேற்றித் தர வேண்டுமென்பது, இப்பகுதி
மக்களின், நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.

எனவே, போதிய நிதியை ஒதுக்கி, இந்த 3 திட்டங்களையும், போர்க்காலஅடிப்படையில், விரைந்து நிறைவேற்றி, அப்பகுதியின் தண்ணீர்ப் பற்றாக்குறைபிரச்னைக்கு, தீர்வு காணுமாறு, தமிழக அரசை, மத்திய நீர்வள ஜல்சக்தித்துறை வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x