Published : 10 Mar 2020 12:41 PM
Last Updated : 10 Mar 2020 12:41 PM

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எச்.பரத்வாஜ் காலமானார்

எச்.பரத்வாஜ்

புதுடெல்லி

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் (83) மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் மாலை காலமானார்.

சிறுநீகரக் கோளாறு காரணமாக டெல்லி சாகேத் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் பரத்வாஜ் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் அவர் மரணம் அடைந்தார். பரத் வாஜுக்கு மனைவியும் ஒரு மகனும் 2 மகள்களும் உள்ளனர். ஹரியாணா மாநிலம், ரோத்தக் மாவட்டத்தின் கர்கி சாம்ப்ளா என்ற கிராமத்தில் பிறந்த பரத்வாஜ், கடந்த 1982 ஏப்ரல் முதல் 2009 ஜூன் வரை 5 முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.

முன்னாள் பிரதமர்கள் ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோரின் கீழ் பணியாற்றிய பரத்வாஜ், 14 ஆண்டுகள் சட்ட அமைச்சராக இருந்தார். 2009 முதல் 2014 வரை கர்நாடக ஆளுநராக பணியாற்றினார். அப்போது தீவிரமாக இருந்த சுரங்க மாஃபியாவை கடுமையாக கையாண்டார். பரத்வாஜின் உடல், டெல்லி நிகாம்போத் காட் பகுதியில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x