Published : 10 Mar 2020 10:04 AM
Last Updated : 10 Mar 2020 10:04 AM
குஜராத் மாநிலம் மாதவ்பூர் கிராமத்தில் சிங்கம் ஒன்று புகுந்து அதகளம் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரி சுஷந்தா நந்தா என்பவர் இந்த வீடியோவை தன் சமூக ஊடகத்தில் பகிர்ந்து, “மணிக்கு 80 கிமீ வேகத்தில் ஒன்று பாய்ந்து வருவதை நினைத்துப் பாருங்கள். உலகின் அதிவேக மனிதன் உசைன் போல்ட்டும் தப்ப முடியாத சிங்கத்தின் வேகம். இந்தச் சூழ்நிலையிலும் சகிப்புத்தன்மை என்பதை இந்தியாவில் காணாமல் வேறு எங்கு காண முடியும்” என்று வாசகத்துடன் வெளியிட்டுள்ளார்.
சிங்கம் வரும் வழியில் மக்கள் கூட்டம் உள்ளது, ஆனால் அது மக்களைக் கண்டு பயந்து ஓடுவதுபோல்தான் வீடியோவில் தெரிகிறது. ஆனால் மக்கள் கூட்டம் பீதியில் தெறித்து ஓடுவதையும் பார்க்க முடிந்தது.
இந்த வீடியோ வைரலானவுடன் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Imagine someone charging at you at 80kmp
Even Usain Bolt can’t escape( Average speed-38kmp)from a charging lion. In such a situation, where will u find tolerance for each other other than India? Video from Madavpur village of Gujurat( VC-SM) pic.twitter.com/PLyOMq6oDv— Susanta Nanda IFS (@susantananda3) March 7, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT