Published : 08 Mar 2020 04:28 PM
Last Updated : 08 Mar 2020 04:28 PM
தனது ட்விட்டர் கணக்குகளை உத்வேகம் மிக்க பெண்களிடம் ஒப்படைக்கப்போவதாக பிரதமர் நரேந்திர மோடி அளித்த கவுரவத்தை எட்டு வயது காலநிலை மாற்ற ஆர்வலர் சிறுமி லிசிபிரியா கங்குஜாம் நிராகரித்தார்.
சர்வதேச மகளிர் தினத்திற்கு முன்னதாக #SheInspiresUs பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி தனது ட்விட்டர் கணக்குகளை உத்வேகம் அளிக்கும் பெண்களிடம் அளிக்கப்போவதாக கூறிய பெண்களில் லிசிபிரியாவும் ஒருவர்.
மணிப்பூரைச் சேர்ந்த 8 வயது சிறுமி லிசிபிரியா கங்குஜாம் தொடர்ந்து பருவநிலை மாற்றத்துக்கு எதிரான குரலை முதன்முதலாக உயர்த்தி வருகிறார். காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தின் மீதான அவரது ஆர்வத்திற்காக, கங்குஜாம் இந்திய ‘கிரெட்டா’என்றும் அழைக்கப்படுகிறார்.
சர்வதேச விருது பெற்ற ஸ்வீடிஷ் பதின்பருவ சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்குடன் பலரும் ஒப்பிடும் லிசிபிரியா கங்குஜா நாடாளுமன்றத்தின் முன் கடந்த ஜூலையில் சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசின் தமது ட்விட்டர் கணக்கில் கடந்த வெள்ளிக்கிழமை, எட்டு வயது குழந்தையின் கதையை உத்வேகம் காரணமாக பகிர்ந்து கொண்டது. அதில், “@ Mygovindia @LicypriyaK மணிப்பூரைச் சேர்ந்த ஒரு குழந்தை சுற்றுச்சூழல் ஆர்வலர். 2019 ஆம் ஆண்டில், அவருக்கு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் குழந்தைகள் விருது, உலக குழந்தைகள் அமைதி பரிசு, மற்றும் இந்தியாவின் அமைதி பரிசு வழங்கப்பட்டது.
அவர் உங்களுக்கு ஊக்கமளிக்கவில்லையா? அவரைப் போன்ற ஒருவரை உங்களுக்குத் தெரியுமா? #SheInspiresUs ஐப் பயன்படுத்தி எங்களிடம் கூறுங்கள்'' என்று கூறியிருந்தது.
மார்ச் 3 ம் தேதி, மோடி ட்வீட் செய்திருந்தார், “வரும் மகளிர் தினத்தில், எனது சமூக ஊடக கணக்குகளை நமக்கு உத்வேகம் அளிக்கும் பெண்களிடம் ஒப்படைக்கப் போகிறேன். இது மில்லியன் கணக்கானவர்களிடம் உந்துதலைப் பற்றவைக்க அவர்களுக்கு உதவும். நீங்கள் அத்தகைய பெண்ணா அல்லது இதுபோன்ற எழுச்சியூட்டும் பெண்களை உங்களுக்குத் தெரியுமா? (லிசிபிரியா கங்குஜாம் காலநிலை ஆர்வலர் டாக்செய்யப்பட்டு) #SheInspiresUs ஐப் பயன்படுத்தி இதுபோன்ற கதைகளைப் பகிரவும்''. குறிப்பிட்டிருந்தார்.
அரசாங்கத்தின் ட்வீட்டுக்கு பதிலளித்த கங்குஜாம் கூறியதாவது:
''அன்புள்ள நரேந்திர மோடி ஜி, நீங்கள் என் குரலைக் கேட்கப் போவதில்லை என்றால் தயவுசெய்து என்னைக் கொண்டாட வேண்டாம்.
உங்கள் முன்முயற்சியின் கீழ் நாட்டின் ஊக்கமளிக்கும் பெண்களில் என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி #SheInspiresUsகள். பலமுறை யோசித்த பிறகு, இந்த கவுரவத்தை நிராகரிக்க முடிவு செய்தேன். ஜெய் ஹிந்த்!''
இவ்வாறு காலநிலை ஆர்வலர் சிறுமி லிசிபிரியா கங்குஜாம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT