Last Updated : 08 Mar, 2020 01:27 PM

 

Published : 08 Mar 2020 01:27 PM
Last Updated : 08 Mar 2020 01:27 PM

வான்வெளியில் சமத்துவம்: டெல்லி முதல் சான்பிரான்சிஸ்கோ வரை 52 விமானங்களை இயக்கும் பெண்கள்

படம்: ஏர் இண்டியா ட்விட்டர் பக்கம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று ஏர் இந்தியாவின் 8 வெளிநாட்டு விமானங்கள் உட்பட 52 விமானங்களை பெண்களே இயக்குகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் மகளிர் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு குடியரசுத் தலைவர் சாதனை படைத்த பெண்களுக்கு நாரிசக்தி வழங்கி கவுரவித்தார். முன்னதாக நேற்று நாரிசக்தி விருதுபெறுபவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

இந்திய ரயில்வே துறையும் இன்று பல இடங்களில் ரயில்களை முழுக்க முழுக்க பெண்களே இயக்க உற்சாகப்படுத்தி வருகிறது. அதேபோல ஏர் இந்தியாவும் 52 விமானங்களை பெண்கள் குழுவினரே இயக்க அனுமதி வழங்கியுள்ளது

ஏர் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள பதிவில், ''ஏர் இந்தியா # IWD2020 ஐ குறிக்கும் வகையில் அனைத்து சர்வதேச குழுவினருடன் 8 சர்வதேச மற்றும் 44 உள்நாட்டு முக்கியமான விமானங்களை இயக்குகிறது. எங்களை முன்னேற்றுவதற்கு முக்கிய பங்கு வகிக்கும் எங்கள் பெண் சகாக்களைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம்'' என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

ஏர் இந்தியாவும் சமூக-கலாச்சார நெறிமுறைகளுடன் ஒத்திசைந்து பெண் சக்தியை வணங்குகிறது. பெண் சக்திகளின் ஆதரவோடு பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை பெண் ஊழியர்களே இயக்கும் ஒரே ஒரு விமான நிறுவனம் ஏர் இந்தியா தான்.

ஞாயிற்றுக்கிழமை சர்வதேச மகளிர் தினம் முன்னிட்டு பெண்கள் அதிகாரத்தை மேம்படுத்தும் வகையில் டெல்லி முதல் சான் பிரான்சிஸ்கோ விமானம் வரை சர்வதேச மற்றும் உள்நாட்டு வழித்தடங்களில் பல பெண் குழுவினர் இயக்குகின்றனர்.

இதில் ஏர் இந்தியாவின் பெண்கள் காக்பிட் மற்றும் கேபின் குழுவினர் பெருமளவில் பங்கேற்கின்றனர். அகன்ற விமானங்களையும், குறுகிய அளவுகொண்ட விமானங்களையும் பெண்கள் இயக்குகின்றனர்.

இவ்வாறு ஏர் இந்தியா தனது அறிக்கையில் கூறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x