Published : 08 Mar 2020 11:08 AM
Last Updated : 08 Mar 2020 11:08 AM
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பை 7 பெண் சாதனையாளர்களிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார்.
இந்த 7 பெண் சாதனையாளர்களும் தங்கள் வாழ்க்கை பயணம் குறித்த அனுபவங்களைப் பிரதமர் மோடியின் சமூக வலைதளக் கணக்கின் வாயிலாகப் பகிர்ந்து கொள்வார்கள்
மகளிர் தினத்துக்குத் தனது ட்விட்டர் வாயிலாக வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் மோடி, " நான் ஏற்கனவே கூறியதுபோல், நான் சமூக வலைத்திலிருந்து இருந்து வெளியேறிவிட்டேன். இன்றைய நாள் முழுவதும், 7 பெண் சாதனையாளர்கள் தங்கள் வாழ்க்கை பயணம் குறித்த தகவல்களை என்னுடைய சமூக வலைத்தளம் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள், உரையாடுவார்கள்.
இந்தியாவில் பல்வேறு சாதனைகளைச் செய்த பெண்கள் பல்வேறு இடங்களில் இருக்கிறார்கள். இந்த 7 பெண்களும் பல்வேறு பிரிவுகளில் மிகச்சிறந்த செயல்களைச்ச செய்துள்ளார்கள். அவர்களின் வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள், ஆசைகள் லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கும். தொடர்ந்து மகளிர் தினத்தை இன்று கொண்டாடுவோம், சாதனைப் பெண்களிடம் இருந்து அனுபவத்தைக் கற்றுக்கொள்வோம்" எனத் தெரிவித்துள்ளார்
பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை விடுத்த அறிவிப்பின்படி," தனது சமூகவலைத்தள கணக்கை மக்களை ஈர்த்த 7 பெண்களிடம் ஒப்படைக்கப் போகிறேன். இவர்களின் அனுபவங்கள் லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கும்" எனத் தெரிவித்திருந்தார். அந்த அடிப்படையில் இன்று தனது பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவற்றை 7 சாதனைப் பெண்களிடம் ஒப்படைத்தார்
முன்னதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியேறலாம் என நினைக்கிறேன்” என நேற்று முன்தினம் இரவு பதிவிட்டிருந்தார்.
இது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியது. மேலும் பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக #NoSir என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT