Published : 07 Mar 2020 06:59 AM
Last Updated : 07 Mar 2020 06:59 AM

தெலங்கானா சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது; மதக் கலவரத்தில் ஈடுபட முயல்வோர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவர்: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை

ஹைதராபாத்

மதக் கலவரங்களில் ஈடுபட முயல்வோர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப் படுவர் என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது உரையில் தெரிவித்தார்.

தெலங்கானா மாநில பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் உரையுடன் நேற்று தொடங்கியது. இக்கூட்டம் வரும் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற் றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

சுமார் 60 ஆண்டுகால நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் தெலங்கானா மாநிலம் உதய மானது. ஆனால், நம் மாநிலம் மிகக் குறுகியகாலத்தி லேயே வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்கிறது. சிலதுறைகளில் நம் மாநிலம் முன்னோடியாகவும் திகழ் கிறது. மின்சாரம், தண்ணீர் பிரச்சினைகளில் இருந்து தெலங்கானா மீண்டெழுந் துள்ளது. 24 மணி நேரமும் விவசாயத்துக்கு தரமான மின் சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

முதியோருக்கு மாதம் ரூ.2,016, மாற்றுத் திறனாளி களுக்கு ரூ.3,016 என மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கணவ னால் கைவிடப்பட்ட பெண் கள், தனியாக வசிக்கும் பெண் களுக்கும் மாத உதவித் தொகை வழங்கப்பட்டு வரு கிறது.

உதவித் தொகை பெறுவதற் கான வயது உச்சவரம்பு விரைவில் 65-லிருந்து 57 ஆகக் குறைக்கப்படும். ஏழை களுக்கு ரேஷன் மூலம் ஒரு கிலோ அரிசி ரூ.1-க்கு வழங்கப்பட்டு வருகிறது.

தெலங்கானா மாநிலம், மத நல்லிணக் கத்தின் சின்னமாக திகழ்கிறது. மாநிலத்தில் அமைதி தவழ்கிறது. அதே நேரத்தில், இங்கு மதக்கலவரத்தில் ஈடுபட முயல்வோர் மீது மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். அவர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவர்.

இவ்வாறு அவர் பேசினார்.

வரும் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கூட்டத் தொடரில், 2020-21 நிதி யாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் கவர்ச்சி கரமான திட்டங்கள், சலுகைகள் அறி விக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x