Published : 06 Mar 2020 09:58 PM
Last Updated : 06 Mar 2020 09:58 PM

கரோனா வைரஸ்;  ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை: ஈரானியர்களை அனுப்பவும் மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி 

ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கவும், இந்தியாவில் உள்ள ஈரானியர்களை அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கவும் ஒரே விமானத்தை இயக்குவது தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

உலகம் முழுவதும் 95,000க்கும் அதிகமான நபர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கரோனாவில் பலி எண்ணிக்கை 3,042 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 3,291 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 31 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி இத்தாலி, ஈரான், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து வருவோருக்கு விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. கரோன வைரஸ் பரவுவதை தடுக்க பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்தநிலையில் ஈரானில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் உட்பட இந்தியர்கள் பலர் அங்கு சிக்கியுள்ளனர். அங்கு கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும்நிலையில் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதுபோலவே இந்தியாவிலும் ஈரானியர்கள் பலர் கரோனா வைரஸ் பாதிப்புடன் உள்ளனர்.

அவர்களை ஈரான் அனுப்பி வைக்க வேண்டும். இதனையடுத்து ஈரானில் உள்ள இந்தியர்களை அந்நாட்டு விமானத்தில் அழைத்து வர மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அதன்படி டெஹ்ரானில் இருந்து அந்நாட்டு விமானத்தில் 300 இந்தியர்கள் டெல்லி அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. அந்த விமானம் திரும்பிச் செல்லும்போது அதில், இந்தியாவில் உள்ள ஈரானியர்களை அனுப்பி வைக்கப்படுவர். இதன் மூலம் பரஸ்பரம் இரு நாட்டினரையும் அவரவர் சொந்த நாட்டிற்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x