Published : 05 Mar 2020 11:38 AM
Last Updated : 05 Mar 2020 11:38 AM
வடகிழக்கு டெல்லியில் சமீபத்தில் சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர் வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாகப் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்த வழக்கில் வன்முறையில் பாதிக்கப்பட்டவர் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமையன்று ஹர்ஷ் மந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் மூத்த வழக்கறிஞர் கொலின் கொன்சால்வேஸ் இந்த விஷயத்தை தலைமை நீதிபதி போப்டே முன்னிலையில் குறிப்பிட்டார்.
இதனையடுத்து தலைமை நீதிபதி, “பாதிக்கப்பட்டவர் இந்த வழக்கில் தலையிடுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது” என்றார்.
கொன்சால்வேஸ் கூறும்போது, வெறுப்புப் பேச்சு வீடியோவில் ஹர்ஷ் மந்தர் பேசியதை பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
இதற்குப் பதில் அளித்த தலைமை நீதிபதி, “மந்தர் வெறுப்பு பேச்சு வீடியோவை பதிவு செய்ய நாங்கள் சொலிசிட்டர் ஜெனரலிடம் கேட்டுக் கொண்டுள்ளோம், இந்த நடைமுறையில் எங்களுக்கு நீங்கள் தேவையில்லை” என்றார்.
உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் மந்தர் சார்பாக தான் வாதாடியதாக கொன்சால்வேஸ் கூற, அதற்கு தலைமை நீதிபத்ஹி, “இங்கு கூட நீங்கள் வாதாடலாம்” என்றார்.
ஹர்ஷ் வர்தன் உச்ச நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் மீது தரக்குறைவான விமர்சனம் வைத்ததால் அவருக்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்கை முன்னெடுக்கக் கோரி டெல்லி போலீஸ் புதனன்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT