Published : 04 Mar 2020 06:37 PM
Last Updated : 04 Mar 2020 06:37 PM
ஜனவரி 15ம் தேதிக்குப் பிறகு அயல்நாடு சென்று திரும்பிய 373 பேர் கரோனா வைரஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர், ஆனால் இதுவரை யாருக்கும் கரோனா இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உ.பி.மாநில சுகாதார அமைச்சகத்திடமிருந்து இத்தகைய அறிவுறுத்தல் ஜனவரி மத்தியிலேயே வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லி நபர் ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் இருப்பது தெரிய வந்ததையடுத்து 4 நாட்கள் சென்றபிறகு 3 குழந்தைகள் உட்பட 6 நபர்களின் மாதிரிகள் கரோனா சோதனைக்குட் படுத்தப்பட்டதையடுத்து பதற்றம் பரவியது. ஆனால் இந்த 6 பேர்களுக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைமை மருத்துவ அதிகாரி அனுராக் பார்கவா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, செவ்வாய் மாலை வரை ஜனவரி 15ம் தேதிக்குப் பிறகு அயல்நாடு சென்று திரும்பிய 373 பேர் கரோனா கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 55 பேர்களுக்கு கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அனைவருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது.
74 பேர் தற்போது கண்காணிப்பில் இருக்கின்றனர், 5 பேரின் சாம்பிள்கள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன
டெல்லியை அடுத்துள்ள நொய்டா கவுதம் புத் நகர் பகுதியில் 2 மருத்துவமனைகளில் கோவிட்-19 சோதனை வசதிகள் உள்ளன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT