Published : 04 Mar 2020 02:41 PM
Last Updated : 04 Mar 2020 02:41 PM
டெல்லியில் சமீபத்தில் நிகழ்ந்த வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் வெறுப்புணர்வைத் தூண்டியதாக தாங்கள் குற்றம்சாட்டிய அரசியல்வாதிகள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றத்தில் மேற்கொண்டனர், ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த 10 பேர்களின் மனுக்க்ளை மார்ச் 6ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் விசாரிக்க அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி வன்முறைகளுக்கு அரசியல்வாதிகள் சிலரின் வெறுப்புப் பேச்சுகளே காரணம் என்ற புகார் எழ அவர்கள் மீது முதல் தகவலறிக்கை பதிய வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தொடர்ந்தனர்
ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த மனுக்களை மார்ச் 6ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பிற மனுக்கள் மீதான ஏப்ரல் மாத விசாரணையை முன் கூட்டியே விசாரிக்குமாறும் உயர் நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த மனுக்கள் குறித்து இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் கவாய் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் கூறும்போது, “இது குறித்த தகராறுகளுக்கான அமைதித்தீர்வு சாத்தியங்களை டெல்லி உயர் நீதிமன்றம் பரிசீலிக்கும்” என்று தெரிவித்தனர்.
சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர் மீதான வெறுப்புப் பேச்சு வழக்கை தன் விசாரணைக்கே வைத்துக் கொண்டது உச்ச நீதிமன்றம்.
மந்தர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
ஆனால் சமூக ஆர்வலர் மந்தரின் வழக்கறிஞர் கருணா நந்தி மந்தர் எந்த விதமான வெறுப்புணர்வையும் தூண்டவில்லை என்று மறுத்தார்.
விசாரணைக்கு இந்த விவகாரம் வந்த போது மூத்த வழக்கறிஞர் கொலின் கொன்சால்வேஸிடம் நீதிமன்ற அம்ர்வு மந்தர் அரசு, நாடாளுமன்றம் குறித்து எதுவும் கருத்துக்களை தெரிவித்தாரா என்று கேட்டது.
அப்போது துஷார் மேத்தா குறுக்கிட்டு மந்தர் சிலபல ஆட்சேபணைக்குரிய கருத்துகளை கூறியதாகத் தெரிவித்தார்.
மேலும் மந்தர் அவ்வாறு பேசியிருந்தால் அதன் பதிவுகளை பிரமாணப்பத்திரத்துடன் கோர்ட்டில் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
மேலும் அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்காமல் மந்தர் மேற்கொண்ட மனுவை விசாரிக்கப் போவதில்லை என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
இதன் பிறகே கலவரத்தில் பாதிக்கப்பட்ட 10 பேர்களின் மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது, அந்த மனுவில் பாஜக அரசியல்வாதிகளான கபில் மிஸ்ரா, பர்வேஷ் மிஸ்ரா, அபய் வர்மா மற்றும் அனுராத் தாக்கூர் ஆகியோர் மீது எப்.ஐ.ஆர். பதிய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT