Published : 04 Mar 2020 12:01 PM
Last Updated : 04 Mar 2020 12:01 PM
இந்த ஆண்டு ஹோலி கொண்டாட்டங்கள் எதிலும் பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளேன் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சீனாவை உலுக்கி வரும் கரோனா வைரஸுக்கு அந்த நாட்டில் இதுவரை 3000 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.
உலகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது.
இந்தியாவில் டெல்லி மற்றும் தெலங்கானாச் சேர்ந்த இருவருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதை மத்திய அரசு நேற்று உறுதி செய்தது. டெல்லியைச் சேர்ந்தவர் சமீபத்தில் இத்தாலி சென்று திரும்பியுள்ளார்.
தெலங்கானாவைச் சேர்ந்தவர் துபாய் சென்று திரும்பியுள்ளார். இரு நோயாளிகளின் உடல் நிலையும் சீராக இருக்கிறது இதையடுத்து, இருவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் தனி அறையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை இன்று எடுத்துள்ளது.
இந்தநிலையில் இந்த ஆண்டு ஹோலி கொண்டாட்டங்கள் எதிலும் பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளேன் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Experts across the world have advised to reduce mass gatherings to avoid the spread of COVID-19 Novel Coronavirus. Hence, this year I have decided not to participate in any Holi Milan programme.
— Narendra Modi (@narendramodi) March 4, 2020
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொது இடங்களில் அதிகமானோர் கூடுவதை தவிர்க்க வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள் அறிவுரை கூறுகின்றனர். எனவே இந்த ஆண்டு ஹோலி கொண்டாட்டங்கள் எதிலும் பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளேன்’’ எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT