Published : 03 Mar 2020 09:26 PM
Last Updated : 03 Mar 2020 09:26 PM
தங்கள் மாநிலத்தில் பசுக்களை கொல்வதையோ, பசுக்களை துன்புறுத்துவதையோ பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க மாட்டோம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார்.
“கிருஷண பகவான் பசுக்களுக்கு சேவை செய்துள்ளார், போஷித்துள்ளார், இத்தகைய புனிதமான பசுக்களை கொல்லப்படுவதை அனுமதிக்கவே முடியது அல்லது அதனைத் துன்புறுத்துவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பசு உள்ளிட்ட கால்நடைகளை நோயிலிருந்து பாதுகாக்க மருந்துகளும் நோய்த் தடுப்பு வாக்சைன்களும் அனுப்பப்பட்டு வருகின்றன.
தெருவில் சுற்றித்திரியும் பசுக்களைப் பாதுகாத்து பராமரிக்க மாநில அரசு பசு ஒன்றிற்கு ரூ.900 நிதி மாதாமாதம் அளிக்கப் படுகிரது.
நாட்டில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தீர்க்கப் படாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே கடவுள் பிரதமர் மோடியையும் என்னையும் தேர்வு செய்துள்ளார். 500 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த ராமர் கோயில் விவகாரம் எப்படி தீர்வு காணப்பட்டது என்பதே இதற்குச் சாட்சி. நம்முடைய பக்தியின் சக்தியினால்தான் ராமர் கோயில் கட்ட முடிவதற்கான சூழல் உருவாகியுள்ளது.
கங்கை நதியைச் சுத்தம் செய்வதில் முன்னெப்போதும் இல்லாத வெற்றியைக் கண்டிருக்கிறோம், அதே போல் 2 ஆண்டுகளில் யமுனாவையும் சுத்தம் செய்து விடுவோம், இவையெல்லாம் வெறும் நதிகள் அல்ல நம் கலாச்சாரப் பாரம்பரியம், இந்த நதிகளுடன் நாம் தாயுடன் உள்ள பிணைப்புடன் இருந்து வருகிறோம்.
5000 ஆண்டுகளுக்கு முன்பாக பகவான் கிருஷ்ணரும் ராதையும் பிராஜ் பகுதியில் தோன்றினர். ஆகவே உலகம் பிராஜ் பகுதியின் புனிதத்தை உணர்ந்துள்ளது” இவ்வாறு கூறினார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT