Last Updated : 03 Mar, 2020 01:29 PM

1  

Published : 03 Mar 2020 01:29 PM
Last Updated : 03 Mar 2020 01:29 PM

எப்படிப்பட்ட நபராக இருந்தாலும் விடக்கூடாது: பிரதமர் மோடியிடம் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தல்

பிரதமர் மோடியைச் சந்தித்தபின் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி

டெல்லி முதல்வராக மூன்றாவது முறையாக பதவி ஏற்றபின் ஆம்ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று பிரதமர் மோடியை அவரின் அலுவலகத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.

டெல்லி வடகிழக்கில் நடந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் எப்படிப்பட்ட நபராக இருந்தாலும், எத்தகைய அரசியல்செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தாலும் தண்டிக்காமல் விடக்கூடாது என்று மோடியிடம் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்

கடந்த மாதம் நடந்த முடிந்த டெல்லி சட்டப்பேரைவத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் 3-வது முறையாக பதவி ஏற்றார்.

பதவி ஏற்பு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்புவிடுத்த நிலையில் அவருக்கு உ.பியில் வேறுநிகழ்ச்சியில் பங்கேற்றதால் வர இயலவில்லை. பதவி ஏற்புக்குப்பின் பிரதமர் மோடியை கேஜ்ரிவால் சந்திக்காமல் இருந்தார்.

இதற்கிடையே கடந்த வாரம் டெல்லியின் வடகிழக்கில் ஏற்பட்ட கலவரத்தில் 46 உயிர்கள் பலியாகின, 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான வீடுகள், பொதுச்சொத்துக்கள், தனியார் உடைமைகள், கார், பேருந்துகள், இரு சக்கர வானங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தீவைக்கப்பட்டன.

பிரதமர் மோடியைச் சந்திக்கச் சென்ற அரவிந்த் கேஜ்ரிவால்

போலீஸாரின் தீவிரமான முயற்சி, கண்காணிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைக்கு பின் மெல்ல, இயல்புநிலை திரும்பியுள்ளது. இந்த சூழலில் முதல்வர் கேஜ்ரிவால், பிரதமர் மோடியை அவரின் அலுவலகத்தில் இன்று சந்தித்தார்.

நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகத்துக்குச் சென்ற முதல்வர் கேஜ்ரிவால் அவருடன் சுமார் 30 நிமிடங்கள் வரை பேசினார். அப்போது இருவரும் டெல்லி கலவரம் தொடர்பாக ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்தச் சந்திப்புக்குப்பின் முதல்வர் கேஜ்ரிவால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " கடந்த சில நாட்களாக டெல்லி போலீஸார் தீவிரமான ரோந்துப்பணி, கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதால், கலவரம் ஒடுக்கப்பட்டு, ஏராளமான உயிர்கள் பறிபோவது தடுக்கப்பட்டது.

கடந்த சிலநாட்களாக வதந்திகள் பரவுவதையும் தடுத்தனர், இது கலவரம் கட்டுப்பட பெரும் காரணமாக இருந்தது. இதேபோனறு கடந்த வாரத்தில் செயல்பட்டிருந்தால், இத்தனை உயிர்கள் போயிருக்காது. இதுபோன்ற வன்முறைகள இனிமேல் டெல்லியில் நடைபெறக் கூடாது.

இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டேன். அவர்கள் எவ்வளவு பெரிய அரசியல் செல்வாக்கு கொண்டவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்காமல் விடக்கூடாது என்று வலியுறுத்தினேன். டெல்லியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன் " எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x