Published : 02 Mar 2020 04:55 PM
Last Updated : 02 Mar 2020 04:55 PM
கொல்கத்தாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமைப் பேரணியில் ‘கோலி மாரோ’ என்று கோஷமெழுப்பிய மூன்று பேரைக் கைது செய்ததாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
கொல்கத்தா நேதாஜி உள்ளரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மம்தா கூறும்போது, “டெல்லியில் மக்கள் கொல்லப்பட்ட விதத்தைப் பார்க்கும் போது அது திட்டமிட்ட படுகொலைகளாகவே தெரிகிறது, பிற்பாடு இதனை மதக்கலவரமாகக் காட்டினர்.
பாஜக பேரணியில் ‘கோலி மாரோ’ (சுட்டுட் தள்ளுங்கள்) என்ற டெல்லியின் மொழியில் கோஷமிட்ட 3 பேரை கொல்கத்தா போலீஸ் கைது செய்துள்ளனர், இது கொல்கத்தா, டெல்லி அல்ல. இந்த கோஷம் வன்முறையை தூண்டுவது, சட்ட விரோதமானது, அரக்கத்தனமானது. இவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் இப்படிப் பேசுபவர்களை சும்மா விட மாட்டோம்.
யார் துரோகி யார் இல்லை என்பதை மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும், இவர்கள் அல்ல. வன்முறைகளுக்காக மன்னிப்பு கேட்க வேண்டிய பாஜக புதிய பகுதிகளை பிடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.
பாஜக ஆளும் மாநிலங்களான உ.பி., திரிபுரா, அஸாம் ஆகியற்றில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகிறது” என்று பேசினார் மம்தா பானர்ஜி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT