Published : 02 Mar 2020 08:32 AM
Last Updated : 02 Mar 2020 08:32 AM
டெல்லி கலவரம் தொடர்பாக இதுவரை 903 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை மையமாக வைத்து வடகிழக்கு டெல்லியில் இரு தரப்பினர் இடையே கடந்த வாரம் பயங்கர மோதல் வெடித்து கலவரமாக மாறியது. இதில் 42 பேர் வரை உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்தக் கலவரம் தொடர்பாக டெல்லி போலீஸார் சிறப்பு புலனாய்வுக் குழுக்களை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பல தனிப்படைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, கலவரத்தை தூண்டிவிட்டவர்கள், வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டறிவதற்காக இந்தத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
254 எப்ஐஆர் பதிவு
இந்தக் கலவரச் சம்பவம் தொடர்பாக போலீஸார் இதுவரை 903 பேரை கைது செய்துள்ளனர். 254 முதல் தகவல் அறிக்கைகள்(எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது நடவடிக்கை தொடரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT