Published : 01 Mar 2020 09:31 AM
Last Updated : 01 Mar 2020 09:31 AM
கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சிப் பிரமுகர் நரசிம்ம பிரசாத், ‘துக்ளக்’ வேடத்தில் மக்களை சந்தித்து அரசின் தோல்விகளை விளக்கினார்.
ஆந்திர முதல்வரின் சொந்த மாவட்டமான கடப்பாவில் உள்ள ரயில்வே கோடூருவில் ‘துக்ளக்’ வேடத்தில் ஒருவர் மக்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அருகில் சென்று பார்த்தபோதுதான் அவர் தெலுங்கு தேசம் கட்சிப் பிரமுகர் நரசிம்ம பிரசாத் எனத் தெரியவந்தது. இவர், மறைந்த சித்தூர் எம்.பி. சிவப்பிரசாத்தின் மருமகன் ஆவர். மறைந்த சிவப்பிரசாத் ஆந்திராவுக்கு ஆதரவாக பல்வேறு வேடங்களில் நாடாளுமன்றம் முன் போராட்டம் நடத்தியுள்ளார். அவரது வழியில் மக்களின் கவனத்தை ஈர்க்கவே துக்ளக் வேடம் அணிந்ததாக நரசிம்ம பிரசாத் கூறினார். “சுமார் 700 வருடங்களுக்கு முன் முகமது பின் துக்ளக் நடத்திய ஆட்சியை இன்றும் நாம் கேலி செய்கிறோம். அவரது வழியில்தான் தற்போது ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி செய்கிறார் என்பதை விளக்கவே இந்த வேடத்தில் வந்தேன்” என்றார்.
துக்ளக் வேடத்தில் இருந்த நரசிம்ம பிரசாத் வழிநெடுகிலும் மக்களின் கவனத்தை ஈர்த்தார். அவரை காண மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT