Published : 01 Mar 2020 08:01 AM
Last Updated : 01 Mar 2020 08:01 AM
பெரிய பதவியில் இருந்தாலும் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட தெலங்கானா முதல்வர்மற்றும் ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்ட ஆட்சியரை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அசாதுதீன் ஒவைசி தனதுசமூக வலைதளப் பக்கத்தில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், தெலங்கானாவின் ஜெயசங் கர் பூபாலபள்ளி மாவட்ட ஆட் சியர் முகமது அஜீம் அகமது ஆகியோரின் மனிதாபிமான செயலை புகைப்படத்துடன் பாராட்டியுள்ளார்.
இதில் அவர் கூறியிருப்பதாவது:
முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தனது அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் முகமது சலீம் என்ற மாற்றுத் திறனாளி சாலையில் காத்திருந்தார். இவரைக் கண்ட முதல்வர்காரை விட்டு இறங்கி விசாரித்தார். அப்போது தனக்கு மாற்றுதிறனாளிகளுக்கான உதவித்தொகை இதுவரை வழங்கப்படவில்லை என்றும் சொந்த வீடு இல்லாமல் சிரமப்படுவதாகவும் சலீம் கூறினார்.
அப்போது இதுகுறித்து உடனே பரீசிலிக்குமாறு அருகில் இருந்த அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். தற்போது சலீமுக்கு மாத உதவித்தொகையும், 2 படுக்கை அறை கொண்ட இலவச வீடும் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்ட ஆட்சியர் முகமது அஜீம் அகமதுவை நேரில் கண்டு மனு கொடுக்க அஜ்மீரா என்ற மூதாட்டி தொலைதூரத்திலிருந்து வந்திருந்தார். ஆட்சியரை காணமுடியாமல் ஆட்சியர் அலுவலக படியிலேயே அசதியில் உட்கார்ந்திருந்தார். அப்போது சில ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்று விட்டு அலுவலகம் வந்த ஆட்சியர், மூதாட்டியின் அருகில் அமர்ந்து அவரது குறைகளை கேட்டார். பிறகு மூதாட்டி கோரியபடி அவருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்க ஆட்சியர் ஏற்பாடு செய்துள்ளார்.
பெரிய பதவியில் இருப்பவர்கள் இவர்களை போல ஏழைகளின் கஷ்டத்தை புரிந்துகொண்டு நடந்தால் நாடே நன்றாக இருக்கும்.
இவ்வாறு ஒவைசி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT