Published : 29 Feb 2020 01:26 PM
Last Updated : 29 Feb 2020 01:26 PM
டெல்லியில் அமைதி திரும்பி வரும் நிலையில் பரிசோதனை அடிப்படையாக இன்று காலை முதல் 4 மணிநேரம் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 நாட்களாக வன்முறை சம்பவங்கள் ஏதுமில்லை. அமைதி திரும்பியுள்ளது. அமைதி திரும்பி வரும் நிலையில் இன்று காலை முதல் 4 மணிநேரம் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி காவல்துறை இணை ஆணையர் அலோக் வர்மா கூறியதாவது:
‘‘டெல்லியில் கலவரம் பாதித்த வடகிழக்கு பகுதியில் அமைதி திரும்பி வருகிறது. இதனால் முக்கிய இடங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
பரிசோதனை அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளோம். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நிலைமையை பொறுத்து படிப்படியாக 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படும்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT