Published : 26 Feb 2020 06:27 PM
Last Updated : 26 Feb 2020 06:27 PM
நாயின் தாகத்தைக் கண்டு பொறுக்காத முதியவர் ஒருவர், குழாயடி நீரைக் கைகளால் ஏந்திக்கொண்டு வந்து தணிக்கும் காட்சி ட்விட்டரில் ஆயிரக்கணக்கானவர்களின் மனதையும் கவர்ந்தது.
ஹெட்போனும் வாட்ஸ் அப்புமாக, பேச்சும் பாட்டுமாகச் செல்லும் இன்றைய வாழ்க்கையில் சாலையில் காணும் மற்றவர்களைப் பற்றியோ மற்ற உயிரினங்களைப் பற்றியோ கவலைப்படுவது அரிதாகிவிட்டது.
ஆனால், தன்னைக் காத்துக்கொள்வதற்கே போராடும் நிலையில் உள்ள 92 வயதுப் பெரியவர் ஒருவர், நாய்க்கு உதவும் வீடியோவைக் கண்டு பலரும் நெகிழ்ந்துள்ளனர்.
வீடியோவில் இக்காட்சி 19 நொடிகள் மட்டுமே ஓடுகிறது. இந்த வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ''உங்களுக்கு ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாத ஒருவருக்காக நீங்கள் ஏதாவது செய்யும் வரை உங்கள் நாளில் நீங்கள் வாழ வில்லை. இன்று நீங்கள் உதவி செய்வதில் கருணையுடன் இருங்கள்'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வீடியோவில், தெருநாய் தண்ணீர் குடிப்பதை முதியவர் மகிழ்ச்சியுடன் பார்த்தார். நான்கு கால் நண்பனுக்கு மீண்டும் மீண்டும் தன் கைகளில் தண்ணீர் கொண்டுவந்து தாகம் தணித்தார்.
You have not lived ur day, until you have done something for someone who can never repay you
Be compassionate in what you today. pic.twitter.com/SK7zXjCxnc— Susanta Nanda IFS (@susantananda3) February 25, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT