

அஸாமில் பெண் ஒருவர் தன்னை அயல் நாட்டினர் தீர்ப்பாயம் இந்தியாவைச் சேர்ந்தவர் அல்ல என்று கூறியதையடுத்து தொடர்ந்த வழக்கில் கவுஹாத்தி உயர் நீதிமன்றம் தன்னை குடிமகன் என்று முன்னுரிமை கோரும் ஒருவரிடத்தில் தான் அதனை நிரூபிக்கும் கட்டாயமும் உள்ளது என்று அறிவுறுத்தி இந்தப் பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்தது.
நீதிபதிகள் மனோஜித் பூயான், பார்த்திவ் ஜோதி சைக்யா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அமர்வு மனுதாரர் நூர் பேகத்தினால் தன் முந்தைய வம்சாவளியில் மூதாதையர் யாரேனும் மார்ச் 25, 1971-ற்கு முன்னால் அஸாமில் வசித்து அவருடன் தனக்கு இருக்கும் தொடர்பை நிரூபிக்க முடியுமா என்ற வகையில் நிரூபிக்கத் தவறி விட்டார் என்று கூறினார்கள்.
1985 அஸாம் ஒப்பந்தம் மார்ச் 25, 1971ஐத்தான் இதற்கு தேதியாக நிர்ணயித்துள்ளது.
அயல்நாட்டைச் சேந்தவர் என்று அயல்நாட்டினர் தீர்ப்பாயம் தீர்மானித்த நூர் பேகம் என்ற இந்த குடியுரிமை மனுதாரர் கிழக்கு அஸாமின் கோலாகட் மாவட்டத்தில் உள்ள ஹபிகான் என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர் 1986-ல் பிறந்ததாகக் கூறுகிறார். தனது குடியுரிமையை நிரூபிக்க 8 ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளார். இதில் 2000ம் ஆண்டின் பள்ளி டிசி யாகும். அதில் நூர் பேகமின் தந்தை பெயர் ராஜு ஹுசைன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது பெயர் இன்னொரு ஆவணத்தில் 1997ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
1996ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட நூர் பேகம் சமர்ப்பித்த ஆவணங்களில் ஒன்றில் ஜெனுராத்தின் என்ற பெயருடைய ஒருவர் நூர் பேகமின் தாத்தா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜஹோரன் ஹுசைன் என்ற வாக்காளர் அடையாள அட்டை கொண்ட ஒருவர் தன் தாயார் என்றார் நூர் பேகம்.
ஆனால் நூர்பேகம் அளித்த இந்த ஆவணங்களை ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. அயல்நாட்டினர் சட்டம், அயல்நாட்டின தீர்ப்பாயத்தை மேற்கோள் காட்டி குடியுரிமை வேண்டுவோர் தங்கள் அடையாளத்தை தாங்களாகவேதான் நிரூபிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
மனுதாரர் தனக்குச் சாதகமாகக் காட்டிய ஆதாரங்களின் அடிப்படையில் கூட தனக்கும் தன் தந்தை, தாயார், தாத்தா ஆகியோருக்குள்ள தொடர்பை நிரூபிக்கத் தவறிவிட்டார், எனவே இவரது மனு விசாரணைக்கு ஏற்றதல்ல ஆகவே மனுவைத் தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
பிப்ரவரி 12ம் தேதி நீதிபதிகள் பூயான் மற்றும் சைக்யா ஆகியோர் ஜபேதா பேகம் என்ற 50 வயது பெண்மணியின் குடியுரிமை கோரிக்கையை நிராகரித்தனர், ஜபேதா பேகம் 15 ஆவணங்களை தனக்குச் சாதகமாக்க சமர்ப்பித்தார். நிலவருவாய் ரசீது, வங்கி ஆவணங்கள், பான் எண் ஆகியவை அடங்கும். இந்தப் பெண் தன் பக்சா மாவட்ட கிராமத்திலிருந்து மாயமானதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.