Published : 24 Feb 2020 12:58 PM
Last Updated : 24 Feb 2020 12:58 PM
குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்குச் செல்லும்போது அங்கு வழங்கப்பட உள்ள உணவுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு முதல் முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரின் மனைவி மெலானியா ட்ரம்ப், மகள் இவாங்கா, மருமகன் ஆகியோர் வந்துள்ளனர். அகமதாபாத் வந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார்.
அதிபர் ட்ரம்ப் மோதிரா கிரிக்கெட் மைதானத்துக்குச் செல்லும் முன் சபர்மதி நதிக்கரையில் இருக்கும் சபர்மதி ஆசிரமத்துக்குச் செல்கிறார். அங்கு சிறிது நேரம் செலவிடும் அதிபர் ட்ரம்ப் அங்கிருந்து மோதிரா மைதானத்துக்குச் செல்கிறார்.
இதற்கிடையே சபர்மதி ஆசிரமத்தில் அதிபர் ட்ரம்ப் அவரின் குடும்பத்தினருக்கு வழங்கச் சிறப்பான உணவுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த உணவுகளை குஜராத் பார்ச்சூன் நட்சத்திர ஹோட்டலின் தலைமை சமையல்கலை நிபுணர் சுரேஷ் கண்ணா தலைமையிலான குழுவினர் தயாரித்துள்ளனர். இந்த உணவுகளில் குஜராத் பாரம்பரிய உணவுகளும், இந்தியப் பாரம்பரிய உணவுகளும் அடங்கியுள்ளன.
அதிபர் ட்ரம்ப்புக்கு வழங்கப்பட உள்ள உணவுகள் குறித்த பட்டியல்:
சபர்மதி ஆசிரமத்துக்கு ட்ரம்ப் வந்தவுடன் அவரை வரவேற்க முதலில் ஆரஞ்சு, கொய்யாப்பழம் கலந்த ஜூஸ் மற்றும் இளநீர் வழங்கப்படுகிறது.
அதிபர் ட்ரம்ப்புக்கு வழங்க பலவிதமான தேநீர் வழங்கப்பட உள்ளது. அதில் அமெரிக்கன் டீ, இங்கிலிஷ் டீ, டார்ஜிலிங் டீ, அசாம் டீ, க்ரீன் டீ, லெமன் டீ, ஐஸ் டீ, ஜிஞ்ஜர் டீ போன்றவை வழங்கப்படுகின்றன.
நொறுக்குத்தீனிகளாக, வறுத்தெடுக்கப்பட்ட பாதாம் பருப்புகள், முந்திரி, கேப்ரிகாட், பேரிச்சை, சோக்கோ சிப், பார்கோலி, நைலான் காமன், கார்ன் பட்டர் சமோஸா , சினாமன் ஆப்பிள்பே, ஹனிடிப் குக்கிஸ், பலவிதமான தானியங்கள் கலந்த ரொட்டி, கஜூ கட்லி போன்றவை வழங்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT