Published : 24 Feb 2020 11:49 AM
Last Updated : 24 Feb 2020 11:49 AM
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வர இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ட்ரம்ப்பை வரவேற்க இந்திய பிரதமர் மோடி குஜராத்துக்கு இன்று (திங்கட்கிழமை) புறப்பட்டுச் சென்றார்.
இந்தியா வரும் அதிபர் ட்ரம்ப்புடன் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவாங்கா, ட்ரம்ப் மருமகன் ஜார்ட் குஷ்னர், அமெரிக்க அரசின் முக்கிய அதிகாரிகள்ஆகியோர் உடன் வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியா வரும் ட்ரம்புக்கு வழக்கப்படும் உணவு வகைகள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
அசைவ பிரியரான ட்ரம்புக்கு இந்திய வருகையில் முழுக்க, முழுக்க சைவ உணவுகள் பறிமாறப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகமதபாத்தில் உள்ள பார்ச்சூன் லேண்ட்மார்க் ஹோட்டல் தலைவர் கூறும்போது, “டரம்புக்கு வழக்கப்படும் உணவுகளில் குஜராத்தின் உள்ளூர் பாரம்பரிய உணவுகள் இடம்பெற்றுள்ளன. சமோசா, ஐஸ் டீ, கீரின் டீ, பிஸ்கட்டுகள் போன்றவையும் அளிக்கப்பட உள்ளன” என்றார்.
பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் இடையே பாதுகாப்பு, நிர்வாக, ராஜாங்க ரீதியில் நட்புறவுகளை மேம்படுத்த இந்தப் பயணம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT