Published : 24 Feb 2020 10:32 AM
Last Updated : 24 Feb 2020 10:32 AM
அமெரக்க அதிபர் ட்ரம்ப்பை வரவேற்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2 நாள் பயணமாக இன்று நண்பகலில் இந்தியா வருகிறார். அகமதாபாத் வரும் ட்ரம்புக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்கப்படுகிறது. அமெரிக்க அதிபரின் வருகையை ஒட்டி அகமதாபாத் நகரில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 25,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Departing for India with Melania! pic.twitter.com/sZhb3E1AoB
— Donald J. Trump (@realDonaldTrump) February 23, 2020
இந்திய வருவதற்காக அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட ட்ரம்ப் மெலானியாவுடன் இந்தியாவுக்கு புறப்பட்டு விட்டேன் என ட்வீட் செய்து இருந்தார்.
India awaits your arrival @POTUS @realDonaldTrump!
Your visit is definitely going to further strengthen the friendship between our nations.
See you very soon in Ahmedabad. https://t.co/dNPInPg03i— Narendra Modi (@narendramodi) February 24, 2020
இதற்கு பதிலளித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
உங்கள் வருகைக்காக இந்தியா ஆவலுடன் காத்திருக்கிறது. உங்கள் வருகையால் இருநாடுகளிடையேயான உறவு மேலும் வலுப்பெறும். விரைவில் உங்களை அகமதாபாத்தில் சந்திக்கிறேன்’’ என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT