Published : 24 Feb 2020 09:41 AM
Last Updated : 24 Feb 2020 09:41 AM

உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி முடிவு

லக்னோ:

அண்மையில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் கட்சியை வலுப்படுத்த அதன் தலைமை முடிவு செய்துள்ளது.

குறிப்பாக உத்தர பிரதேசம், மேற்குவங்கம், பிஹார், உத்தராகண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியாணா, ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு மேற்குவங்கத்திலும் வரும் 2022-ம் ஆண்டு பஞ்சாபிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளன. இந்த மாநிலங்களில் ஆம் ஆத்மி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

உத்தர பிரதேசத்தில் வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: உத்தர பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம். அடுத்த 3 மாதங்களில் கட்சியின் தொண்டர்கள் சுமார் 1.07 லட்சம் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து ஆதரவு கோருவார்கள். இதுதொடர்பான அறிக்கை டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலிடம் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x