Published : 23 Feb 2020 08:52 PM
Last Updated : 23 Feb 2020 08:52 PM
இந்தியாவுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வருகை தரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிகாரபூர்வ நிகழ்ச்சிப் பட்டியலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
வெளியுறவுத் துறை அமைச்சகம் பட்டியலிட்டுள்ள ட்ரம்ப்பின் நிகழ்ச்சி நிரல் அட்டவணை:
பிப்ரவரி 24 திங்கள்
11.40 மணி - அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வருவார்.
12.15 மணி - சபர்மதி ஆசிரமம் (அகமதாபாத்).
13.05 மணி - மோதிரா விளையாட்டு அரங்கத்தில் 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்வு.
15.30 மணி - ஆக்ராவுக்கு விமானத்தில் புறப்பாடு.
16.45 மணி - ஆக்ராவுக்கு வருகை.
17.15 மணி - தாஜ்மஹால் பார்வையிடல்.
18.45 மணி - டெல்லிக்கு விமானத்தில் புறப்பாடு.
19.30 மணி - டெல்லிக்கு வந்து சேருதல்.
பிப்ரவரி 25 செவ்வாய்
10.00 மணி - ராஷ்டிரபதி பவனில் சடங்கு வரவேற்பு.
10.30 மணி - ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் சமாதியில் மலர் அஞ்சலி செலுத்துதல்.
11.00 மணி - ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு.
12.40 மணி - ஹைதராபாத் மாளிகையில் ஒப்பந்தங்கள் பரிமாற்றம் / பத்திரிகையாளர் சந்திப்பு.
19.30 மணி - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் ராஷ்டிரபதி பவனில் சந்திப்பு.
22.00 மணி - புறப்படுதல்.
இதனை வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT