Last Updated : 14 Feb, 2020 02:44 PM

 

Published : 14 Feb 2020 02:44 PM
Last Updated : 14 Feb 2020 02:44 PM

டெல்லி தேர்தலில் காங்கிரஸ், லாலு, மாயாவதியின் கட்சிகளை விட அதிக வாக்குகள் பெற்ற சிவசேனா 

புதுடெல்லி

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் அன்றாடம் ஒரு புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தவகையில், அங்கு சிவசேனாவிற்கு இந்தமுறை காங்கிரஸ், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகியக் கட்சிகளை விட அதிக வாக்குகள் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மகராஷ்டிராவின் சிவசேனா கட்சியும் அவ்வப்போது தன் வேட்பாளர்களை போட்டியிட வைக்கிறது. இந்த தேர்தலில் அக்கட்சி டெல்லியின் 70 தொகுதிகளில் 5 இல் போட்டியிட்டிருந்தது.

இதில் முதன்முறையாக சிவசேனாவிற்கு வாக்குகள் உயர்ந்துள்ளன. இது, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவற்றையும் விட அதிகரித்துள்ளது.

டெல்லியின் புராரி தொகுதியில் சிவசேனா ஆம் ஆத்மி மற்றும் பாஜகவிற்கு பிறகு மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இங்கு சுமார் 18,000 வாக்குகள் பெற்ற சிவசேனா மற்று தொகுதிகளில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது.

தனித்து போட்டியிட்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை விடவும் சிவசேனா வாக்குகள் அதிகரித்துள்ளன. இது, மகராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாதக் காங்கிரஸ் ஆதரவுடன் ஆளும் அக்கட்சியை உற்சாகப்படுத்தி உள்ளது.

இதனிடையே, காங்கிரஸ் வேட்பாளர்களின் நிலை டெல்லியில் இதுவரை இல்லாத பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர். இங்கு 65 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸின் வேட்பாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் கட்சியினரே வாக்களிக்கவில்லை.

இன்னும் சில காங்கிரஸ் வேட்பாளர்கள் தாம் போட்டியிட்ட தொகுதிகளில் சுமார் 200 உறவினர்கள் இருந்தும் இருபதிற்கும் குறைவான வாக்குகள் பெற்றதாக புலம்பி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x