Last Updated : 01 Feb, 2020 08:17 PM

13  

Published : 01 Feb 2020 08:17 PM
Last Updated : 01 Feb 2020 08:17 PM

‘அவர்களின் மூதாதையர்கள் இந்தியாவைத் துண்டாடினர்’ - சிஏஏ எதிர்ப்பாளர்களை நோக்கி யோகி ஆதித்யநாத் விமர்சனம்

புதுடெல்லி

டெல்லியில் தேர்தலையடுத்து கரவால்நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். ஷாஹின்பாக் சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கு கேஜ்ரிவால் பிரியாணி அளித்தார் என்று சாடினார்.

இந்தியா உலக அரங்கில் படுவேகமாக வளர்ச்சியடைவதைக் கண்டு பொறாமைப் படுபவர்களே குடியுடிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடுகின்றனர் என்றார் ஆதித்யநாத்.

1947-ல் இந்தியாவை இரண்டாகப் பிரித்தவர்கள்தான் இன்றைய சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்களின் மூதாதையர்கள் என்று கடுமையான வார்த்தையை பயன்படுத்தினார்.

“டெல்லியில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் போராட்டங்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அல்ல. இந்தியா வல்லரசாகி விடகூடாது என்று கருதுபவர்கள் போராடுகின்றனர்.

இவர்களின் மூதாதையர்கள்தான் இந்தியாவை இரண்டாக உடைத்தனர். எனவே இவர்கள் ‘ஏக் பாரத், ஷ்ரேஷ்ட் பாரத்’ என்ற ஒன்றை கட்டமைப்பதன் மீது அடிப்படையில் வெறுப்புக் கொண்டவர்கள்.

முன்பு கல்லெறிபவர்கள் பாகிஸ்தானிலிருந்து பணம் பெற்று பொதுச்சொத்துக்களுக்கு காஷ்மீரில் சேதம் விளைவித்தனர். கேஜ்ரிவால், காங்கிரஸார் இவர்களை ஆதரிக்கின்றனர். அதே போல்தான் நம் ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை நரகத்துக்கு அனுப்பினர், ஆனால் காங்கிரஸும், கேஜ்ரிவாலும் இவர்களுக்கு பிரியாணி ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் நாங்கள் அவர்களை துப்பாக்கி ரவைகளை தின்ன வைத்தோம்.

கேஜ்ரிவாலுக்கு மெட்ரோ, சுத்தமான நீர், மின்சாரம் தேவையில்லை, அவருக்குத் தேவை ஷாஹின்பாக், எது தேவை என்பதை நீங்கள் தீர்மானியுங்கள். போராட்டக்காரர்களுக்கு பிரியாணி பொட்டலம் அளிக்க அவர் பணம் செலவழிப்பார், வளர்ச்சிக்காக அல்ல” என்று கடுமையாகப்பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x