Published : 06 Aug 2015 12:12 PM
Last Updated : 06 Aug 2015 12:12 PM
விக்கிபீடியா இணையதளப் பக்கத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை இழிவுபடுத்தும் விதமான தகவல்கள் வெளியிட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது.
இது குறித்து மக்களவையில் புதன்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "விக்கிபீடியாவில் ஜவஹர்லால் நேரு குறித்து தவறான தகவல்களை தொகுத்த நபர்களிடம் ஏற்கெனவே விசாரணை நடந்து வருகிறது" என்றார்.
விக்கிபீடியாவில் ஜவஹர்லால் நேரு குறித்த தகவல் இடம்பெறும் பக்கத்தில் அவரை இழிவுபடுத்தும் விதமான தகவல்கள் இடம்பெற்றதாக கடந்த ஜூன் மாதம் சர்ச்சை எழுந்தது. இதனை அடுத்து, அது தொடர்பான தகவல்கள் அந்தப் பக்கத்தில் திருத்தப்பட்டன.
மத்திய அரசின் ஐ.பி. மூலம் தொகுக்கப்பட்டது?
மத்திய அரசின் ஐ.பி. முகவரியிலிருந்து மோசடியாக ஜவஹர்லால் நேருவை இழிவுபடுத்தும் தகவல்கள் தொகுக்கப்பட்டதாக காங்கிரஸ் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT