Published : 03 Jan 2020 04:21 PM
Last Updated : 03 Jan 2020 04:21 PM
குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டும் சர்வதேச சமூகத்திடமிருந்து இந்தியாவை ராஜிய ரீதியாக தனிமைப்படுத்தி விடும் என்று முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரும், வெளியுறவுச் செயலருமான சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் அவர் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கூறும்போது, “காஷ்மீர் நடவடிக்கை உட்பட, தொடர்ச்சியான நடவடிக்கைகளின் குவிமைய விளைவு என்னவெனில் நாம் தனிமைப்படுத்தப்படுவோம் என்பதே. அமெரிக்க பிரதிநிதிகளுடனான சந்திப்பை வெளியுறவு அமைச்சர் தவிர்த்தார்” என்றார்.
மேலும் அவர் கூறும்போது, “சர்வதேச ஊடகங்களை நாம் பார்த்தாலே தெரியும், இந்தியா மீதான உலக பொதுக்கருத்து தற்போது மாறிவிட்டது. வங்கதேச வெளியுறவு அமைச்சர் கூறினார், ‘அவர்கள் தங்களுக்குள்ளாகவே அடித்துக் கொள்ளட்டும்’எனக் கூறினார், நண்பர்களே இப்படிக் கூறினால் எதிரிகள் என்ன உணர்வார்கள் என்பது தெரிகிறது” என்றார் சிவசங்கர் மேனன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT