Published : 28 Dec 2019 02:08 PM
Last Updated : 28 Dec 2019 02:08 PM
திரிபுரா மாநிலத்தில் உள்ள திரிபுரா கிராம வங்கி தொடர்ந்து 19-வது ஆண்டாக லாபம் ஈட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் அந்த வங்கி ரூ.44.43 லாபம் ஈட்டியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் அந்த வங்கியின் ஒட்டுமொத்த வர்த்தகம் ரூ.10 ஆயிரம் கோடியைத் தாண்டும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்
திரிபுரா கிராம வங்கியின் தலைவர் மகேந்திரன் மோகன் கோஸாமி கூறுகையில் " கடந்த 2001-2002-ம் ஆண்டில் இருந்து திரிபுரா கிராம வங்கி தொடர்ந்து ஆண்டுதோறும் லாபம் ஈட்டி வருகிறது. இந்தியாவில் உள்ள 45 கிராம வங்கிகளில் நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் ரூ.44.43 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் ரூ11.36 கோடி லாபம் ஈட்டியிருந்தது
தற்போது இந்த வங்கிக்குத் திரிபுராவில் 160 கிளைகளும், 12 சிறு கிளைகளும் செயல்படுகின்றன. கடந்த செப்டம்பர் மாதம்வரை 8.94 சதவீதம் வரை டெபாசிட் உயர்ந்து ரூ.6,617 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.6ஆயிரத்து 73 கோடியாக டெபாசிட் இருந்தது. கடந்த நிதியாண்டில் ரூ125.45 கோடி லாபம் ஈட்டியுள்ளது" எனத் தெரிவித்தார்
நாட்டில் உள்ள மற்ற தேசிய வங்கிகளின் கடன் வைப்பு வீதம்(சிடிஆர்) 66 சதவீதமாக இருக்கும் நிலையில் இந்த வங்கியில் 40 சதவீதம் மட்டுமே இருக்கிறது. திரிபுராவில் உள்ள 75சதவீத மக்களும் இந்த வங்கியால் பயன் பெறுகிறார்கள். இந்த வங்கியின் சார்பில் 225 மைக்ரோ ஏடிஎம்களும், 192 வர்த்தக முகவர்களும் செயல்படுகின்றனர், இந்த முகவர்கள், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று பணத்தைப் பெற்று வருகின்றனர்
மேலும், இந்த வங்கி தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், வங்கி உத்தரவாதம் அளிப்பவர் இன்றி கடன் அளித்து வருகிறது. இதற்காக 6 ஆயிரம் கூட்டுப் பொறுப்புக் குழுக்களை உருவாக்கியுள்ள திரிபுரா கிராம வங்கி, அந்த குழுவில் 20 ஆயிரம் பங்குபெற்றுள்ளனர். மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்பாடா யோஜனா முதல் அனைத்து திட்டங்களையும் இந்த வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT