Published : 28 Dec 2019 09:21 AM
Last Updated : 28 Dec 2019 09:21 AM
ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்கும் திட்டம் இருப்பதாக முதல்வர் ஜெகன்மோகன் கடந்த 17-ம் தேதி அறிவித்தார். இதையடுத்து தலைநகர் அமராவதிக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆந்திர அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் பெர்னி நானி கூறியதாவது:
புதிய தலைநகரம் குறித்து ஆய்வுசெய்ய உயர்நிலைக்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. 3 தலைநகரங்களுக்கு ஆதரவாக ஜி.என்.ராவ் கமிட்டி அளித்த அறிக்கையை இக்குழு ஆராயும். புதிய தலைநகரம் குறித்து வரும் ஜனவரியில் பாஸ்டன்கன்சல்டிங் குரூப் அளிக்கும் அறிக்கையையும் இக்குழு ஆராயும். உயர்நிலைக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்” என்றார்.
இதனிடையே அமராவதியில் விவசாயிகள் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வன்முறை ஏற்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT