Published : 27 Dec 2019 03:25 PM
Last Updated : 27 Dec 2019 03:25 PM
சத்தீஸ்கரின் ராய்ப்பூர் நகரில் மூன்று நாள் தேசிய பழங்குடி நடன விழாவை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். விழாவின்போது பழங்குடியின சமூக மக்களுடன் இணைந்து அவர் நடனமாடி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.
தேசிய நிகழ்வில் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பார்கள். இலங்கை, உகாண்டா, பெலாரஸ், மாலத்தீவு, தாய்லாந்து, பங்களாதேஷ் உள்ளிட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள்.
இன்று முன்னதாக, காந்தி தனது ட்விட்டர் வலைதளத்தில் இந்த தனித்துவமான திருவிழா நமது வளமான பழங்குடி கலாச்சார பாரம்பரியத்தை காண்பிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் முக்கியமான ஒரு படியாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.
விழாவில், வெள்ளை உடையில் உடையணிந்து, செயற்கை பைசன் கொம்புகளுடன் சிவப்பு தலைக்கவசம், காந்தி ஒரு டிரம்ஸை அடிக்கும் போது, பழங்குடியினருடன் வட்டவடிவமாக சுற்றி ஆடிவந்தார்.
இது பஸ்தார் பகுதியில் உள்ள அபுஜமாத்தின் தண்டமி மாடியா பழங்குடியினரின் மிகவும் பிரபலமான நடனம் ஆகும். இது கவுர் நடனம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நடனம் ஆண் மற்றும் பெண் நடனக் குழுவினரால் நிகழ்த்தப்படுகிறது. ஆண் நடனக் கலைஞர்கள் பைசன் ஹார்ன் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டு நடனமாடும்போது டிரம் வாசிப்பபது வழக்கம். பழங்குடியினர் திருவிழாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தை ட்வீட் செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT