Last Updated : 10 Dec, 2019 11:01 AM

 

Published : 10 Dec 2019 11:01 AM
Last Updated : 10 Dec 2019 11:01 AM

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வடகிழக்கு மாநிலங்களில் முழு அடைப்புப் போராட்டம்

குவஹாத்தி

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் 11 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா திங்களன்று பலத்த 7 மணி நேரங்களுக்கும் மேலான விவாதத்தை அடுத்து வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று மக்களவையில் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 311 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் கிடைத்தன.

2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அசாம், அருணாசலப் பிரதேசம், மேகாலயம், நாகாலாந்து, மிஸோரம், மணிப்பூா், திரிபுரா ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் அமைப்புகள் இணைந்து இன்று 11 மணி நேரம் முழுஅடைப்பு போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்து இருந்தன. இதன்படி, இன்று காலை 5 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் துவங்கியது.

நாகாலாந்து மாநிலத்தில் பழங்குடியினா் திருவிழா நடைபெற்று வருவதால், அங்கு மட்டும் முழு அடைப்பு போராட்டத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பு காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x