Published : 06 Dec 2019 08:23 AM
Last Updated : 06 Dec 2019 08:23 AM
ஆர். பாலசரவணக்குமார்
உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரி திமுக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலை10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறது. முன்னதாக வழக்கு விசாரணையின்போது, ‘புதிதாக பிரிக் கப்பட்டுள்ள 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம்’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் டிச.27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான தேர்தல் அறிவிக்கை இன்று (டிச.6) வெளியாக உள்ளது.
இந்நிலையில், ‘தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, கள்ளக் குறிச்சி, தென்காசி மற்றும் ஏற்கெனவே இந்த மாவட்டங்கள் அங்கம் வகித்த வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருநெல்வேலி என மொத்தம் 9 மாவட்டங்களில் மறுவரையறைப் பணிகளை சட்ட ரீதியாக முடிக்காமல் மாநில தேர்தல்ஆணையம் அவசரகதி யில் ஊரக உள்ளாட்சிப் பகுதி களுக்கு மட்டும் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. எனவே, உள்ளாட் சித் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும்’ என கோரி உச்ச நீதி மன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்திருந்தது.
மாநில தேர்தல் ஆணையம் தாக் கல் செய்திருந்த பதில் மனுவில், ‘புதிதாக மாவட்டங்களைப் பிரிக்கும் முன்பாகவே மறுவரையறைப் பணி கள் கடந்த 2011 மக்கள்தொகை அடிப் படையில் ஏற்கெனவே முடிக்கப்பட்டு விட்டன. புதிய மாவட்டங்கள் பிரிக்கப் பட்டதற்கும் மறுவரையறைப் பணி களுக்கும் சம்பந்தம் இல்லை’ என தெரிவித்திருந்தது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, ‘‘புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங் களில் மறுவரையறைப் பணிகளை சட்டப்பூர்வமாக முடிக்காமல் தேர் தல் தேதிகளை அறிவித்துள்ளனர். இதன்மூலம் உச்ச நீதிமன்ற உத்தரவை அப்பட்டமாக மீறியுள்ளனர். இது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு உண்மையான உள் ளாட்சி ஜனநாயகத்துக்கு வழிவகுக் காது’’ என்றார்.
மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி ஆஜராகி, ‘‘தொகுதி மறுவரையறை, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு மற்றும் பெண் களுக்கான இடஒதுக்கீடு என அனைத் துப் பணிகளையும் சட்டப்பூர்வமாக முடித்தபிறகே தேர்தல் தேதிகள் அறிவிக் கப்பட்டுள்ளன. மக்கள்தொகை அடிப் படையில் மறுவரையறைப் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டதால், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தொகுதி மறுவரையறை செய்யத் தேவையில்லை. வரும் 2021-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் போது மீண்டும் மறுவரையறை செய் யப்படும்’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘புதிதாக மாவட்டங்களைப் பிரித்து விட்டு, அந்த மாவட்டங்களுக்கு தொகுதி மறுவரையறை செய்யத் தேவை யில்லை என்றால் அதை எப்படி புரிந்து கொள்வது? அது குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும். இதனால் இடஒதுக்கீடு உள்ளிட்ட நடைமுறைகள் பாதிக்கப் படும்’’ என்றனர்.
‘‘தேர்தல் நடக்க வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பமும். ஆனால், அந்த தேர்தல் நேர்மையாக, நியாய மாக, அதைவிட ஜனநாயக முறைப்படி சட்டப்பூர்வமாக நடக்க வேண்டும்’’ என அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார்.
திமுக எம்.பி., ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி, ‘‘31 மாவட்டங்களுக்கு மட்டுமே மாவட்டப் பஞ்சாயத்து பதவி களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள் ளது. ஆனால், தற்போது 37 மாவட்டங் கள் உள்ளன. எனவே, இந்த தேர்தல் அறிவிப்பு செல்லாது என ரத்து செய்ய வேண்டும். அத்துடன் தேர்தலுக்கும் தடை விதிக்க வேண்டும்’’ என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘தேர் தலை நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதேநேரம் இந்த 9 மாவட்டங்களுக்கு மட்டும் மறுவரையறை உள்ளிட்ட அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்றி அதன்பிறகு தேர்தலை நடத்துங்கள் என தள்ளிப்போடலாம்’’ என கருத்து தெரிவித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தரப்பு வழக்கறிஞர்கள், ஒட்டுமொத்த மாக தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றனர்.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘நாடாளுமன்றம் என்ன விதிகளை வகுத்துள்ளதோ அதன்படி தேர்தல் நடக்க வேண்டும். ஆனால், அதை தவிர்த்து குறுக்கு வழியில் தேர்தல் நடத்தக் கூடாது. எனவே, புதிதாக பிரிக் கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேர் தலை தள்ளிப்போடுவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் பிற்பகலுக்குள் பதிலளிக்க வேண்டும்’’ எனக்கூறி விசாரணையைத் தள்ளிவைத்தனர்.
பிற்பகலில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட் டங்களில் தேர்தலை நடத்த தயார்’ என மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்தது.
அப்போது திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ‘‘ஏற்கெனவே மாநில தேர்தல் ஆணை யம் ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங் களாக தேர்தலை அறிவித்துள்ளது. இந்தச் சூழலில் தற்போது மீண்டும் 9 மாவட்டங்களுக்கு மட்டும் தனியாக தேர்தலை நடத்த அனுமதிக்கக் கூடாது. அனைத்து மாவட்டங்களிலும் தேர் தலை நடத்தாவிட்டால் அதுவும் குழப் பத்தைதான் ஏற்படுத்தும்’’ என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர் தலை நடத்தலாம்’’ என கருத்து தெரி வித்து வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்தனர்.
இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு அளிக்கிறது. இதையடுத்து, திட்டமிட்டபடி இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT