Published : 05 Dec 2019 06:07 PM
Last Updated : 05 Dec 2019 06:07 PM

சபரிமலை விவகாரம்: 2018-ம் ஆண்டு தீர்ப்பு இறுதித் தீர்ப்பு அல்ல- தலைமை நீதிபதி போப்டே

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, வியாழனன்று வாய்வார்த்தையாகக் கூறும்போது, 50 வயதுக்கும் கீழான பெண்களை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிப்பது குறித்த செப்டம்பர் 2018-ன் உச்ச நீதிமன்ற தீர்ப்பு இறுதித் தீர்ப்பு அல்ல, ஏனெனில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 14ம் தேதி 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு செப். 2018-ல் உச்ச நீதிமன்றம் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு மேற்கொண்ட போது தெளிவான முடிவை தெரிவிக்கவில்லை. பெண்கள் கோயிலுக்குள் நுழைவதன் சட்டப்பூர்வத் தனமை பற்றி நீதிபதிகள் மவுனம் காத்தனர். மாறாக பரந்துபட்ட வகையில் பக்தியில் பெண்களுக்கு சம உரிமை இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றியும் சம்பிரதாயங்களை கடைபிடிப்பதற்கான உரிமை பற்றியும் பேசியது. பெரும்பான்மை நீதிபதிகள் 2018 செப்டம்பர் உத்தரவுக்கு தடை விதிக்கவும் இல்லை.

இந்நிலையில் வியாழனன்று கேரளாவைச் சேர்ந்த 50 வயதுக்கும் குறைவான பிந்து அம்மினி என்ற பெண்மணி கோயிலுக்குள் தான் நுழைவதற்குக் காவல்துறை பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனு செய்துள்ளார். இவரை மூத்த வழக்கறிஞர்களான இந்திரா ஜெய்சிங் மற்றும் பிரசாந்த் பத்மநாபன் ஆகியோர் பிரதிநிதித்துவம் செய்து கூறும்போது, கோயிலுக்குச் செல்லும் போது பிந்து அம்மினியை சிலர் தாக்கியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்திரா ஜெய்சிங் கூறும்போது, இவருக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸ் மறுத்து விட்டது என்று குற்றச்சாட்டு எழுப்பினார். செப்.2018 தீர்ப்பு ரத்து செய்யப்படாத போது தங்கள் கட்சிக்காரர் கோயிலுக்குள் நுழைவது சட்டப்படி செல்லுபடியாவதே என்று வாதிட்டார் ஜெய்சிங்.

இதற்கு குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “ஆனால் அது இறுதித் தீர்ப்பு அல்ல வேறு பெரிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது” என்றார்.

ஆனால் செப்.2018 உத்தரவு அரசியல் சாசன அமர்வின் உத்தரவு என்று வலியுறுத்திய இந்திரா ஜெய்சிங், சபரிமலைக் கோயில் வருடம் பூராவும் திறந்திருக்கும் கோயில் அல்ல, எனவே விரைவில் இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும் என்றார்..

இந்நிலையில் இவரது மனுவுடன் ரெஹானா பாத்திமா என்பவரது மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x