Published : 04 Dec 2019 08:38 AM
Last Updated : 04 Dec 2019 08:38 AM
புதுடெல்லி
மக்களவைத் தேர்தலில் காங்கிர ஸுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் ராகுல் காந்தி. இந்நிலையில் மீண்டும் அந்தப் பதவியை ஏற்க ராகுல் தயாராகி வருவதாகத் தெரியவந்துள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவாரியாக பெற்ற தோல்வியால் ராகுல், தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதை யடுத்து தலைவராக யாரும் பொறுப்பு ஏற்க முன்வராததால், இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி அமர்ந்தார்.
இந்நிலையில், நடைபெற்ற ஹரியாணா மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் களில் பாஜகவுக்கு மக்களவைத் தேர்தலை போன்ற ஆதரவு கிடைக்கவில்லை. ஹரியாணாவில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட ஜேஜேபி ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டிய நிலை பாஜகவுக்கு ஏற்பட்டது.
மகாராஷ்டிராவில் பழம் பெரும் கூட்டணியான சிவசேனா- பாஜக ஆட்சி அமைக்க முடிய வில்லை. இங்கு, தனக்கு எதிராக போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து சிவசேனா கட்சி ஆட்சி அமைத்துள்ளது.
அண்மைக் காலமாக பாஜக வுக்கு ஏற்பட்ட சரிவை கண்டு ராகுல் தற்போது உற்சாகம் அடைந்துள்ளார். இதேநிலை, தற்போது ஐந்து கட்ட தேர்தலாக நடைபெற்று வரும் ஜார்க்கண்டிலும் நிகழும் என்பது ராகுலின் எதிர் பார்ப்பாக உள்ளது. இந்தச் சூழலில் அவர் மீண்டும் காங்கிரஸ் தலைவ ராகப் பொறுப்பேற்க சம்மதித்து இருப்பதாகத் தெரிகிறது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் காங்கிரஸ் தேசிய நிர்வாகிகள் வட்டாரங்கள் கூறும் போது, “மகராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைய சோனியாவுடன் ராகுலும் பெரும் பங்காற்றினார். இதன் பலனால், ராகுல் தனது வெளி நாட்டு பயணத்தை ரத்து செய்து விட்டு ஜார்க்கண்ட் தேர்தலில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள வுள்ளார். கட்சியின் மூத்த தலைவர்களும் கட்சியின் தலைமைப் பதவியில் ராகுலின் மறுவரவை பற்றி பேசத் துவங்கி உள்ளனர்” எனத் தெரிவித்தன.
தலைவர் பதவி ராஜினாமாவுக்கு பின்னர் ராகுல் முதன்முறையாக மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைய முக்கியப் பங்கு வகித்துள்ளார். இவரது பரிந்துரை யின் பேரில்தான் சட்டப்பேரவை யின் சபாநாயகராக நானா பட்டோலே, மாநில அமைச்சர் களாக நிதின் ரவுத், பாலா சாஹேப் தொராட் ஆகியோர் அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கு அம்மூவரும் ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதே காரணம். அதேபோல், மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு சற்று மவுனம் காத்த ராகுல், கேள்விகள் எழுப்புவதையும் நிறுத்தி இருந்தார்.
கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வெளிநாட்டுக்கும் சென்று விட்டவர் தற்போது மீண்டும் ஆர்வம் காட்டத் துவங்கி உள்ளார். கடந்த வாரம் மக்களவையில் கோட்சேவை பற்றி பாஜக எம்.பி பிரக்யா தாக்குர் கூறிய சர்ச்சைக் கருத்தை ராகுல் ஆவேசமாகக் கண்டித்திருந்தார்.
எனவே, விரைவில் ராகுல் தலைவர் பதவியில் அமருவதற் கான வாய்ப்புகள் உள்ளன. இவருக்காக, காரியக் கமிட்டியில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி அதை அகில இந்திய காங்கிர ஸின் பொதுக்குழு ஏற்றுக் கொண்டாலே போதுமானது எனக் கருதப்படுகிறது. எனவே, காங்கிரஸின் தலைவர் பதவிக்கு ராகுல், இரண்டாவது முறையாக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT