Published : 29 Nov 2019 07:33 AM
Last Updated : 29 Nov 2019 07:33 AM

ராமர் கோயில் அறக்கட்டளை தலைவராக ஆர்எஸ்எஸ் நிர்வாகியை நியமிக்க வேண்டும்: உ.பி. முதல்வர் யோகி கலந்துகொண்ட கூட்டத்தில் வலியுறுத்தல்

ஆர்.ஷபிமுன்னா

 புதுடெல்லி

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கின் (ஆர்எஸ்எஸ்) நிர்வாகியை, ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கும்படி வலி யுறுத்தப்பட்டுள்ளது. வாரணாசி யில் நடைபெற்ற இந்த ஆலோ சனைக் கூட்டத்தில் பாஜக சார்பில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொண் டார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த 9ம் தேதி அளித்தது. இந்த உத்தரவின்படி 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு ஓர் அறக்கட்டளையை அமைக்க வுள்ளது.

இந்த அறக்கட்டளையின் தலைவர் பொறுப்பை பெறு வதற்கான ஆலோசனைக் கூட்டம் ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்றது. நேற்று முன்தினம் வாரணாசியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாஜக சார்பில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். இதில், ராமர் கோயில் அறக்கட்ட ளையின் தலைவராக ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகிகளில் ஒரு வரையே தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ’இந்து தமிழ்’ நாளேட்டிடம் அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தரப்பினர் கூறும்போது, ‘இந்த அறக்கட்ட ளைக்கு தலைமை ஏற்பதிலும், முக்கிய அங்கம் வகிப்பதிலும் அயோத்தி சாதுக்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால், கோயில் பணிக்கு சிக்கல் ஏற்படா மல் இருக்க அதன் தலைவராக ஆர்எஸ்எஸ் அமைப்பு, தனது நிர்வாகிகளில் ஒருவரை அமர்த் தும்படி மத்திய அரசுக்கு பரிந் துரைக்க முடிவு செய்யப்பட் டுள்ளது’ எனத் தெரிவித்தனர்.

அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இடித்துவிட்டு அங்கு ராமர் கோயில் கட்டுவதற்கானப் போராட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத்தினர்(விஎச்பி) முக்கிய பங்கு வகித்தனர். பாஜகவின் சகஅமைப்பான விஎச்பி சார்பில், கோயில் கட்டுவதற்காக 1985 ஆம் ஆண்டு ராமஜென்ம பூமி நியாஸ் எனும் அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அறக்கட்டளையே கோயிலை கட்டும் எனவும், புதிதாக ஒரு அறக்கட்டளையை அமைக்கத் தேவையில்லை என்றும் விஎச்பி வலியுறுத்தி வருகிறது.

மேலும், அயோத்தியில் உள்ள இரண்டு சாதுக்களின் அறக்கட் டளையான ராமஜென்ம பூமி ராமாலாயா அறக்கட்டளை மற்றும் ராமஜென்ம பூமி கோயில் அறக் கட்டளை ஆகிய அமைப்பு களின் சாதுக்களும் தங்களையே தலைவராக்க வலியுறுத்து கின்றனர். இதுபோன்ற எதிர்ப்பு களை சமாளிக்க, விஎச்பியின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் தான் சரியான தேர்வு என திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எனினும், இதுதொடர்பாக இறுதி முடிவை மத்திய அரசே எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x